June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே பஸ் – பைக் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

1 min read


2 youths killed in bus-bike collision near Tenkasi

7.6.2026

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேந்தமரம் அருகே உள்ள கரைக்கண்டார்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மார்க்கெட்டன் மகன் மணிகுமார் (வயது 24) கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இவருக்கு கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இந்துராணி என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர் தன்னுடைய மனைவியின் சொந்த ஊரான
கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக காத்திருந்த மைத்துனரான கிருஷ்ணாபுரம்
மேற்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் ஹரிஸ் பாலா (வயது 18) என்பவரை அழைத்துக் கொண்டு பைக்கில் கரைக்கண்டார்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். கடையநல்லூரில் இருந்து சேர்ந்தமரம் சாலையில் கண்மணியாபுரம் கம்பனேரி விலக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது சுரண்டையில் இருந்து கடையநல்லூரை நோக்கி எதிரே வந்த தனியார் பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்ட மணிக்குமார், ஹரீஷ் பாலா இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்தின் டிரைவரான வீரசிகாமணி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த
இசக்கி மகன் மாரியப்பனிடம் (வயது 36) விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *