June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர்: தவறவிட்ட 85 கிராம் செயினை போலீசில் ஒப்படைத்த காண்ட்ராக்டர்

1 min read

Kadayanallur: Contractor hands over lost 85 gram chain to police.

7.6.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுந்தரேஸ்வரத்தைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் ரத்தினவேல் பாண்டியன் இவர் ரஹ்மானியாபுரம் முதல் தெரு காவல் ஆய்வாளர் குடியிருப்பு அருகே டீக்கடையில் நின்று கொண்டிருந்த பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இதே பகுதியைச் சேர்ந்த செய்யது என்பவர் தன்னுடைய தங்கையின் 85 கிராம் நகை பெட்டியை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பொழுது கடையநல்லூர் காவல் ஆய்வாளர் குடியிருப்பு முன்பு சாலையில் தவற விட்டு விட்டு சென்றுவிட்டார்.

அப்பொழுது அதன் அருகில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியன் அந்த தங்க நகை பெட்டியை எடுத்து திறந்து பார்த்தபொழுது 85 கிராம் நகை இருந்தது. உடனே அவர் அக்கம்பக்கத்தில் உள்ள அவர்களிடம் கேட்டதில் நகைக்கு உரிமையாளர்கள் அடையாளம் தெரியாததால் அதனை கடையநல்லூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் இடம் ஒப்படைத்தார் .

இது குறித்து கடையநல்லூர் காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்கச் செயின் குறித்து செய்தியை வெளியிட்டனர் செய்தி பரவியது தொடர்ந்து நகையை தவறவிட்ட செய்யது என்பவர் தன்னுடைய தங்கையுடன் காவல் நிலையம் வந்தார் நகை சாலையில் தவறவிட்டது குறித்து தகவல் அளித்தார் அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி முன்னிலையில் ரத்தினவேல் பாண்டியன் தங்க நகைகளை நகை தவறவிட்ட செய்யது இடம் ஒப்படைத்தனர். சாலையில் தவறவிட்ட நகை கிடைத்ததில் அண்ணன் தங்கை இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ரத்தினவேல் பாண்டியனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *