கடையம் பெண்கள் பள்ளிக்கு செல்லம்மாள் பெயர்-அப்பாவு உறுதி
1 min readChellammal’s name for Kadayam Girls’ School-Appa is confirmed
28.6.2023
கடையம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு செல்லம்மாள் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
பாரதி திருமணநாள்
தென்காசி மாவட்டம் கடையம்
நூலகத்தில் சென்னை சேவாலயா சார்பில் செல்லம்மாள் – பாரதியின் 126 ஆவது திருமண நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
பொ.சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். கடையும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
சேவாலயா நிறுவனர் வா.முரளிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். புவனேஸ்வரி மற்றும் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு செல்லம்மாள்- பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
பாரதியை உலகிற்கு அடையாளம் காட்டியவர் செல்லம்மாள் இல்லை என்றால் பாரதியின் படைப்புகள் வெளியாகாமல் போயிருக்கும் கடையத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கு செல்லம்மாள் பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து உரிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
வீதி உலா
முன்னதாக நடைபெற்ற செல்லம்மாள் பாரதி வழக்கு வீதி உலாவினை கடையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமி நாதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் அதனைத் தொடர்ந்து மங்கல இசை நாதஸ்வரம் நிகழ்ச்சியும்,
நடன ஆசிரியை விசாலாட்சி ஏற்பாட்டில் சிவாலயா பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது மாலையில் நடந்த கருத்தரங்கில் பாரதியின் கொள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி இளைஞர்களின் பாரதி என்ற தலைப்பிலும், உமா பாரதி கடையத்தில் பாரதி என்ற தலைப்பிலும், வானவில் ரவி செல்லம்மாளும் பாரதியும் என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குனர் குமார் காதலும் பாரதியும் என்ற தலைப்பிலும், கருத்துரை வழங்கினார்கள்.
செல்லம்மாள் பாரதி திருமண நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
பொ.சிவபத்மநாதன் ஆகியோர் நூலகர் மீனாட்சி சுந்தரம் வாசகர் வட்ட தலைவர் சேதுராமலிங்கம் ஆகியோரிடம் ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி கடையம் அரசு நூலகத்தின் முதல் பெரும் புரவலர்களாக இணைந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், சசிகுமார், அர்ஜுனன், ரவீந்திரன், சுரேஷ், முருகன், அகமது ஈசாக், மேசியா சிங், மோகன், மாவட்ட பிரதிநிதி பெருமாள், முகமது யாகூப், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி, கோதர் மைதீன், பக்கீர் மைதீன், வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிக்குமார், சங்கர், புஷ்பராணி, சுந்தரி, ரம்யா, சக்தி சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காளித்துரை, முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ராமராஜ், ஏ.பி.என் குணா, க.முருகன், சிங்கக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபால் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவாலயா நிர்வாகி சங்கிலி பூதத்தான் மற்றும் நிர்வாகிகள், கடையம் வாசகர் வட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.