June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

வாலாஜாவில் 4 டன் போதை புகையிலை பறிமுதல்

1 min read

Four tons of intoxicating tobacco seized in Walaja

18.7.2023
வாலாஜா சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் அதிகாலையில் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த இரண்டு சொகுசு கார்களை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் மடக்கினர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் இரண்டு கார்களில் தீவிரமாக சோதனையிட்ட போது கார்களில் தலா 2 டன் என மொத்தம் 4 டன் தடை செய்யப்பட்ட போதை வஸ்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் போலீசார் இரண்டு சொகுசு கார்கள் மற்றும் 4 டன் எடை கொண்ட போதை குட்கா பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து இரண்டு கார்களில் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் ராஜஸ்தான் மாநிலம் பட்டோலி பகுதியை சேர்ந்த வர்ஷிராம் (25) பிருசா (22) ஆகிய 2 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தற்போது அவர்களிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

வாலாஜா அருகே போலீசார் வாகன சோதனையின் போது இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *