பயில்வானிடம் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை /தபசுகுமார்
1 min readKannayiram trapped by Bailwan/comedy story /Thabasukumar
29/7/2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலா பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.வழியில் கடையத்தில் வரவேற்பை பெற்ற அவர் அங்கிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலா பயணிகளுடன் வந்தார். வரும் வழியில் பசுமையை ரசித்த அவர் சினிமா பாடல்களை பாடி ரசித்தார். பல திருப்பங்களை சந்தித்த பஸ் பாபநாசத்தை சென்றடைய இளங் காற்று அனைவரையும் வரவேற்றது.
ஹாய்..பாபநாசம் வந்தாச்சு என்று சுடிதார் சுதா சொல்ல கண்ணாயிரம் பஸ் கண்ணாடியை திறந்து எட்டிப்பார்த்தார். பறவைகளின் குரல் பதட்டத்தை காட்டியது. போட்டு ஒண்ணையும் காணமே என்று நினைத்த கண்ணாயிரம் இறங்கவா வேண்டாமா என்று விழிக்க….பூங்கொடி என்னங்க…விழிக்கிய என்று கேட்க…இது பாபநாசம் தானா…பயில்வான் ஒண்ணும் செல்லவில்லையே என்று கேட்டார்.
ஆமா பயில்வான் எங்கே என்று கண்ணாயிரம் தேடியபோது பயில்வான் கடைசி சீட்டில் குறட்டை விட்டு தூங்கிக்கி கொண்டு இருந்தார்.
என்ன இப்படி தூங்குகிறார் என்று நினைத்த கண்ணாயிரம் அவரது காதில் சின்ன இலையை வைத்து வருட…பயில்வான் கொட்டாவி விட்ட படி திரும்பி படுத்துக்கொள்ள கண்ணாயிரம் கை அவரது கைக்குள் சிக்கிக்கொண்டது.
என்ன இவர் இப்படி சேட்டை பண்ணுறாரு.. கையி மாட்டிக்கிச்சே என்று புலம்பியபடி நிற்க சுடிதார் சுதா இதைப்பார்க்க பயில்வான் சட்டைப்பையில் கண்ணாயிரம் காசு எடுப்பதாக கருதி .. கண்ணாயிரம் …என்ன பண்ணுற…அப்படியெல்லாம் காசு எடுக்கக் கூடாது என்று சுடிதார் சுதா சொல்ல கண்ணாயிரம் என்ன காசா என்று மிரள அதைக்கேட்ட பூங்கொடி ஏய்…என் கணவரையா திருடன் என்று சொல்லுற.. அவருக்கு என்ன காசு பணம் இல்லையா…நீ…எப்படி சொல்லலாம்.. மன்னிப்பு கேட்காம விடமாட்டேன் என்று கத்த… கண்ணாயிரம் அய்யோ..நாம ஒண்ணு செய்ய அது ஒண்ணா நடக்க..என்ன செய்வேன் … இவர் வேறு கைய விட மாட்டேங்கிறாரு என்ன செய்வேன் என்று திணற சுடிதார் சுதாவோ ஏய்..என்னையா மன்னிப்பு கேட்க சொல்லுற…உங்க கண்ணாயிரம் என்ன செய்யுறாரு பாருங்க…என்க பூங்கொடி..கண்ணாயிரத்தை பார்த்து ஏங்க..அங்க என்ன பண்ணுறீங்க. இங்கே வாங்க என்று கத்த கண்ணாயிரம் பயில்வான் பிடியிலிருந்து தன் வலது கையை விடுவிக்க முயல.. அது முடியாமல், ஆ..என்று முழு மூச்சிரைக்க பயன்படுத்தி கையை இழுக்க…அப்போது முடியாமல்..என்ன இது சிரிப்பா போச்சு …கை வரமாட்டேங்குது என்று விழிக்க…பூங்கொடியோ என்னங்க எல்லோரும் சிரிக்காங்க வாங்க என்று கத்த… கண்ணாயிரம்..ஆ.எல்லோரும் சிரிக்காங்களா…பயில்வான் சிரிக்கலையே…ஏன் தூங்குறாரு அதனால சிரிக்கல நாம அவரை சிரிக்க வைப்போம் என்று பயில்வான் இடது கையால் கிச்சு கிச்சு மூட்டினார்.
தூக்கத்திலிருந்த பயில்வான். ஏய் யாரது…கிச்சு கிச்சு மூட்டாதீங்க….சொன்னா கேளுங்க…என்று சொன்ன போதும் கண்ணாயிரம் விடாமல் கிச்சு கிச்சு மூட்ட..என் கையை விடுங்க முதல்ல என்று கண்ணாயிரம் கதற….பயில்வான் தனது பாடிய விட கண்ணாயிரம் அப்பாட நல்ல வேளை கையை விட்டான் என்று சொல்லி கையை விடுவித்துக் கொண்டு ஓடிப் போய் பூங்கொடியிடம் நின்று கொண்டார்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த பயில்வான்…யாருங்க என்னை கிச்சு கிச்சு மூட்டுனது சொல்லுங்க..யாரு ..அவங்களை அடிக்காம விடமாட்டேன்…சொல்லுங்க… என்று மிரட்ட கண்ணாயிரம் பதறிப்போய் பூங்கொடியின் முந்தானையில் பதுங்கிக் கொள்ள சுடிதார் சுதா எழுந்து…நான்தான் அப்படி செய்தேன்…என்று சொல்ல…பயில்வான்…கோபம் குறைந்தது.
ஏன் சுதா அப்படி செஞ்ச..இனி ஒரு தரம் அப்படி பண்ணாத…நான் ஒரு சிரிச்சா விக்கல் வரும் ..அது நிக்காது…ஆஸ்பத்திரிக்குப் போகணும். நைட்டு சரியா தூங்கல அதான் கொஞ்சம் அசந்துட்டேன்.. சரி பாபநாசம் வந்துட்டா என்றார்.
சரி..சரி..எல்லோரும் இறங்குங்க என்க சுடிதார் சுதாவோ..அட என்ன சிரிப்புக்குள் இவ்வளவு ஆபத்து இருக்கா என்று யோசிக்க படி பஸ்சை விட்டு இறங்கினார்.கண்ணாயிரம் அப்பாட தப்பிச்சோம் என்று கண்களை உருட்டியபடி நின்று கொண்டிருந்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.