அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன பொதுக்குழு கூட்டம்
1 min read
Government Transport Corporation Labor Federation General Committee Meeting
13.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுக் குழுகூட்டம் நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில்
நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத் தின் தலைவர் சுடலைமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குருசாமி முருகேஷ் ராம்தாஸ் தயானந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் லட்சுமணன் அசோகன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை மாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்துள்ள பணிகள் குறித்து பொதுச்செயலாளர் சக்கரபாண்டி அறிக்கை சமர்ப்பித்தார் அறிக்கை மீது விவாதம் நடைபெற்று ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரவு செலவு அறிக்கையை மணிகண்டன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத் தின் கௌரவத் தலைவராக லட்சுமணன், தலைவராக அசோகன், துணைத் தலைவர்களாக மணி, ராம்தாஸ் முருகேஷ் தயானந்தன் தாமோதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும் பொதுச் செயலாளராக ராதாகிருஷ்ணன் துணை பொது செயலாளராக சக்கரபாண்டி,செயலாளர்களாக ராதாகிருஷ்ணன் சுரேஷ் நீலகண்டன் பாப்பா ஆகியோரும், பொருளாளர் ஆக சுடலைமுத்து ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 31 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கிட வேண்டும். நான்காண்டு ஊதிய ஒப்பந்த காலத்தினை மூன்றாண்டாக மாற்றி அமைத்திட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் அனைத்து பிரிவுகளிலும் புதிய பணியாளர்களை நியமனம் செய்யப்பட வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளன்றே பனிக்கால பயன் தொகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத் தின் துணைப் பொது செயலாளர் சக்கரபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.