கழுநீர்குளம்பஞ்சாயத்து தலைவர் முருகன் குடும்பத்திற்கு தி.மு.க. ரூ.1 லட்சம் நிதியுதவி
1 min read
DMK to the Murugan family of Kaganirkulamba Panchayat president. 1 lakh financial assistance
13.8.2023
தென்காசி மாவட்டம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கை.முருகன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியினை மாவட்ட திமுக சார்பில், பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கல்லூத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இது நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவனுப் பாண்டியன் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு, கை.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன் மாவட்ட திமுக சார்பில் ரூபாய் .1 லட்சம் நிதியுதவியினை, குடும்பத்தினரிடம் நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்.
முன்னதாக மறைந்த கை.முருகன் திருவுருவப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர், தென்காசி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன், ஆலடி எழில்வாணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் கடையம் ஜெயக்குமார், தென்காசி அழகுசுந்தரம், ஆலங்குளம் தெற்கு செல்லத்துரை, ஆலங்குளம் வடக்கு அன்பழகன், செயற்குழு உறுப்பினர் வீ.கே.புதூர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி, முத்துராஜ்,பழனிச்சாமி, கீழப்பாவூர் பேரூராட்சி மன்றதலைவர் பி.எம்.எஸ்.ராஜன், பெத்தநாடார்பட்டி ஊராட்சித்தலைவர் ஜெயராணிகலைச்செல்வன், இளைஞரணி கோமு, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ்முத்துபாண்டியன், குறும்பலாப்பேரி இளங்கோ, சுரேஷ்கண்ணா, தங்கச்சாமி, தளபதிமுருகேசன், தங்கேஸ்வரன், நாராயணசிங்கம், பாண்டி, காசிபாண்டி, சீனிநம்பியார், ராஜசேகர்,ஜெகன், சீதாராமர், காளிமுத்து, லிங்கம்டெய்லர், திருமலைகுமார், அழகுதமிழ், சாம்பவர்வடகரை மாறன், சுதன்ராஜா, ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.