மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
1 min read
ADMK in Madurai Golden Jubilee Conference- Inaugurated by Edappadi Palaniswami
10.8.2023
மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாநாடு
மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று தொடங்கியது. அதிமுகவின் பிரமாண்ட மாநாட்டில் மேடைக்கு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வந்தாா. அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
கொடிக்கம்பம்
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார். இதுவே அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அக்டோபர் மாதம் 8-ந்தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு அவர் பேசியது தான் புயலைக் கிளப்பியது. அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
இதன் சென்டிமெண்டாக இன்று மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க. கொடி மற்றும் கொடிக்கம்பம் திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அ.தி.மு.க. கொடி சென்றிருப்பது, தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டு திடலில் நேற்று இரவு முதல் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. தொண்டர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் உணவை வாங்கி சென்றனர். தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தபோதும் உணவு பரிமாறும் குழுவினர் உணவுகளை பரிமாறிக்கொண்டே இருந்தனர். இந்த ஏற்பாடுகளை பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உணவுகளை வாங்கி சென்று சாப்பிட்டனர். தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து சமையல் பணிகளும், உணவு பரிமாறும் பணிகளும் நடந்து கொண்டே இருந்தது.
மதுரை ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் பிரமாண்டமாக நடந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநாட்டு பந்தலில் அமர குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், அந்த நேரத்திற்கு தகுந்தவாறும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்க வேண்டும் என்பதாலும் காலையில் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். இதனால் ரிங் ரோடு திருமங்கலம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கம்பம், தேனி, கோவை, கிருஷ்aணகிரி, சேலம், நாகர்கோவில், நெல்லை, சங்கரன்கோவில், ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருந்து வந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் திருமங்கலம், மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் அணிவகுத்து சென்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு வாகனங்கள் நின்று, நின்று சென்றன. வாகனங்களின் அணிவகுப்பை பார்த்து உற்சாகம் அடைந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களில் இருந்து இறங்கி நின்று செல்பி எடுத்தும், ரீல்ஸ் செய்தும் மகிழ்ந்தனர். மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இன்றும் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால் வாகனங்களை காத்திருந்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.