June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுராந்தகம் அருகே கார், வேன் மோதியதில் 4 பேர் பலி

1 min read

maduranthagam accitent -4 kill

9.9.2023
மதுராந்தகம் அருகே கார், வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து வேன் ஒன்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆட்களை ஏற்றிக் கொண்டு மதுராந்தகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, மதுராந்தகம் அருகே வேன், சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த மதுராந்தகத்தை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் காரில் பயணித்த சக்திவேல், குருமூர்த்தி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடேசன், பூவரசன் ஆகியோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களில் பூவரசன் என்பவர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். வேனை ஓட்டி வந்த பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்து வந்த செய்யூர் காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *