குற்றாலம் அருகே 10 லட்சம் மோசடி; 2 பேர் கைது
1 min read10 lakh fraud near Courtalam; 2 arrested
18.9.2023
குற்றாலம் அருகே 3 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி என்பவரது மகன் பெருமாள்சாமி
(வயது 49) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழில் வகைக்காக ரூபாய் 3 கோடி தேவைப்படுவதாக அருண்பிரசாத் என்பவரிம் கடன் கேட்டுள்ளார்.
அப்போது அருண் பிரசாத் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகர் பகுதியைச் சார்ந்த பீர் முகமது என்பவரது மகன் நாகூர் மீரான் (வயது 49) என்பவரிடம் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பெருமாள்சாமி நாகூர் நீரானை சந்தித்து தனக்கு தொழில் விஷயமாக ரூபாய் மூன்று கோடி கடனாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நாகூர் மீரான் மூன்று கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு தனக்கு கமிஷனாக ரூபாய் 16 லட்சம் முன் பணமாக தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதனை நம்பிய பெருமாள் சாமி ரூபாய் 10 லட்சத்தை கொடுத்ததோடு, மீதமுள்ள 6 லட்ச ரூபாய்க்கு செக் மற்றும் புரோ நோட்டுகளையும் கொடுத்துள்ளார்.
ஆனால் நாகூர் மீரான் கூறியபடி ரூபாய் 3 கோடி கடன் பெற்று தரவில்ல.இதனால் ஏமாற்றம் அடைந்த பெருமாள் சாமி நாகூர் மீரானை தொடர்பு கொண்டு ரூபாய் மூன்று கோடி கடன் பெற்று தாருங்கள் அல்லது நான் கொடுத்த 16 லட்சம் ரூபாயை திரும்ப கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
ஆனால் நாகூர் மீரான் பணத்தை கொடுக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பெருமாள் சாமி இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர் மீரான் மற்றும் இலஞ்சி பகுதியைச் சார்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த ஜெயப்பிரியா லோகேஷ் உட்பட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.