தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு கீர்த்தி சக்ரா விருது
1 min read
Tamil Nadu soldier Meenakshi Sundaram awarded Kirti Chakra
8/6/2026
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரவீன் பிரபாகர் ஜஞ்சலுக்கு, கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவியிடம் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஜூன் 08) முப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மற்றும் மாநில, யூனியன் பிரதேச போலீஸ் அதிகாரிகளுக்கு வீரதீர விருதுகளை வழங்கினார். இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடந்த பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
லெப்டினன்ட் கமாண்டர் சூரஜ் பராஷர், லெப்டினன்ட் கர்னல் நிதீஷ் பார்தி சுக்லா, மேஜர் ஆதித்ய பிரதாப் சிங், இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் கேவட் மற்றும் ரமேஷர் துர்கா தேஷ்முக் ஆகியோருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரவீன் பிரபாகர் ஜஞ்சலுக்கு, கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவியிடம் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
வெள்ளம் இழுத்துச்சென்ற சக ராணுவ வீரரை காப்பாற்றிய லெப்டினென்ட் ஷஷங்க் திவாரி, 23, ஆற்றின் வேகத்தில் சிக்கி உயிர் நீத்தார். அவரது தியாகத்தை கவுரவிக்கும் வகையில், இன்று கீர்த்தி சக்ரா விருது பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், தீரத்துடன் செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
மொத்தம் 47 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் 5 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருது வழங்கப்பட்டது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் வழங்கப்பட்ட இந்த விருதுகளை, அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.