பரமக்குடியில் விநாயகர் சிலைக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை
1 min readMuslims line up for Ganesha statue in Paramakudi
19.9.2023
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.இதைத் தொடர்ந்து பரமக்குடியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கோவில்களில் விநாயகருக்கு கொழுக்கட்டைகள் படைத்து விஷேச தீபாரதணைகள் நடந்தன.வீடுகயில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.
மேலும் பரமக்குடி கிழக்குப் பகுதி இளைஞர் பேரவை மற்றும் சிறகுகள் அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தினர். இங்கு மத நல்லிணக்கத்தை எடுத்து காட்டும் வகையில் அப் பகுதியில் வசித்து வரும் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் இஸ்லாமிய இளைஞர்கள் கிழக்குப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்து செலுத்தினர். பின்பு இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமிய இளைஞர்களுக்கு கிழக்குப் பகுதி இளைஞர்கள் பேரவை சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பரமக்குடியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்த இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது.