குற்றாலத்தில் மீண்டும் சீசன் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
1 min readSeasonal tourist crowd increases again in Courtalam
30.9.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்வதோடு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் மெல்லிய சாரல் மழையும் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குற்றாலத்தில் மீண்டும் சீசன் துவங்கிவதைப் போல காட்சி தருகிறது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
அப்போது குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த திருச்சியைச் சார்ந்த சேர்மத் துரை (வயது 12) என்பவர் மீது சிறிய கல் வந்து விழுந்து உள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் தண்ணீர் வரத்து சற்று குறைந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் மேலும் தற்போது தொடர் விடுமுறை இருப்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்வதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குற்றால அருவிகளில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்தா காணப்படுவதோடு அவர்கள். உற்சாகமாய் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.