June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் 18 வயது பெண் கொலை

1 min read

18-year-old girl murdered in Nellai

2.10.2023
நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்யும் 18 வயது சந்தியா என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் அருகே நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல் அந்தப் பெண் இன்றும் வேலைக்கு சென்றார். இன்று காலை வந்த சந்தியா கடையிலிருந்து குடோனுக்கு பொருள்கள் எடுத்து சென்று இருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அருகே நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் இந்த படுகொலை நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *