June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

உஜ்வாலா திட்ட மானியம் மேலும் அதிகரிப்பு

1 min read

Further increase in Ujjwala scheme subsidy

4/10/2023
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் 200 ரூபாயில் இருந்து ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

தற்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டரை ரூ. 703 விலையில் வாங்கி வருகின்றனர். புதிய அறிவிப்பின் படி பயனாளிகள் சமையல் சிலிண்டருக்கு ரூ. 603 செலுத்தினால் போதுமானது.

வருமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாகவே உஜ்வாலா திட்டம் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 9.6 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 75 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *