June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மாற்றுத் திறனாளிகள்கணக்கெடுப்பு

1 min read

Census of Persons with Disabilities in South Kashmir

6.10.2023
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி களுக்கான கணக்கெடுப்பை செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கக் களப்பணியாளர்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர் களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார் கள். கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்; தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *