கடையம்: விபத்தில் பலியான குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி- அமைச்சர் வழங்கினார்.
1 min read
Khadayam: Minister gave relief fund of Rs 2 lakh to the family of the accident victims.
7/10/2023
குன்னூர் பேருந்து விபத்தில் பலியான கடையம் பகுதியை சேர்ந்த 7 பேர் குடும்பத்தி னருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து குன்னூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கடையம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து உயிரிழந்த கடையம் பகுதியைச் சேர்ந்த 7 பேரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அவர்களுக்கு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன், தென்காசி கோட்டாட்சியர் லாவன்யா, தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், மாநில சுற்றுச்சூழல் அணி;த்தலைவர் பூங்கோதை ஆலடிஅருணா, மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், சீனித்துரை, சுரேஷ், பேரூர் செயலாளர் லட்சுமணன்,, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, நிர்வாகிகள் புகாரி மீரா சாஹிப், சசிகுமார், சுரேஷ்,அர்ஜுனன்,பக்கீர் மைதீன், கோதர் மைதீன், வின்சென்ட், முல்லையப்பன், வின்சென்ட் பால், பெருமாள், முகமது யாகூப், மாரியப்பன், அகம் முருகன், எல் அண்ட் டி முருகன், அந்தோணி தாமஸ், தமிழரசி, ஜஹாங்கீர், ரம்யா ராம்குமார், புஷ்பராணி, ஆவடி கோமதி, அற்புதராஜ், மேசியா சிங், மோகன், ஞானராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ், அழகேசன், பாண்டியன், செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.