எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க. வெளிநடப்பு
1 min read
Edappadi Palaniswami denied permission to speak: ADMK walk out
10102023
தமிழக சட்டசபையில் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசி முடித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் முஸ்லிம் விடுதலையில் அ.தி.மு.க. அரசு கண்ணை மூடிக் கொண்டதாக தெரிவித்தார். தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விட்டு தற்போது முஸ்லிம் சிறைக் கைதிகளை ஆதரிப்பது ஏன்? என்பது அனைவருக்கும் தெரிந்தது தான் என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்தது அ.தி.மு.க. கட்சிதான் என்றார். அப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்கள் மீது அ.தி.மு.க.வுக்கு திடீரென அக்கறை வந்தது ஏன்? என்று கேட்டார்.
இதையடுத்து ஜவாஹிருல்லாவை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.