கலெக்டர் நடவடிக்கையால் கடையநல்லூர் கழிப்பறையில் கட்டண பட்டியல்
1 min read
Fee list displayed at Kadayanallur restroom following Collector’s action
18.7.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, கழிப்பறையில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது பேருந்து நிலைய கழிப்பறை நுழைவாயிலில் அதிகாரப்பூர்வ கட்டண விவரங்கள் டிஜிட்டல் பேனரில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மலம் கழிக்க ₹5, சிறுநீர் கழிக்க ₹2, குளிக்க ₹7 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.