சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கானஇலவச பயிற்சி- தென்காசி ஆட்சியர் தகவல்
1 min read
For Law Entrance Examination Free Training- Tenkasi Collector Info
13.10.2023
தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் சட்டப்படிப்பு படிப்பதற்கான அரசால் நடத்தப்படும் சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணாக்கர்கள் மற்றும் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான நேர்காணல் குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி. என்ற முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்:04633-248711 மற்றும் அலைபேசி எண்:7448828513 மூலமாகவோ விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்