July 19, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் வருண கலச பூஜை-பொங்கல் வைத்தும் வழிபாடு

1 min read

Worship at Thoranamalai with Varuna Kalasa Pooja and Pongal

13.10.2023
தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியை முன்னிட்டு வருணகலச பூஜை நடந்தது. மேலும் விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

தோரணமலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் தமிழ்மாதம் கடைசி வெள்ளி என்றாலை பக்தர்கள் அதிகம் கூடுவார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை கடைசி வெள்ளிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த வளர்ச்சிக்கு அடிகோலியவர் பரம்பரை அறங்காவலர் ஆதிநாயாரயணன் என்றால் அதை சமுதாய வழிபாட்டாக மாற்றிய பெருமை அவரது மகனும் தற்போதைய அறங்காவலருமான ஆ.செண்பகராமனுக்கு சேரும்.
ஆம் இப்போது கடைசி வெள்ளி அன்று மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்று வருகிறது.
அதன்படி புரட்டாசி மாத கடைசி வெள்ளியான இன்று (13.10.2023) நடைபெற்றது.


இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது.
முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்திருந்து, கும்மியடித்து வழிபட்டனர். மேலும் விவசாயம் தழைக்க வேண்டி விவசாயிகள் பொங்கலிட்டு, அதனை சுவாமிக்கு படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர். இன்று காலையிலும் மதியமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *