திருவண்ணாமலை வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
cheef Minister M. K. Stalin’s speech at the meeting of Tiruvannamalai polling station in-charges
22.10.2023
” தமிழ்நாட்டில் 40 தொகுதிகளும் நமதே என்ற குறிக்கோளுடன் தி.மு.கவினர் செயல்பட வேண்டு்ம்” வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பயிற்சி பாசறை
திருவண்ணாமலை அடுத்த மலம்பாம்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்மான அரங்கத்தில் திமுக சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி தருமபுரி கள்ளக்குறிச்சி விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அனைவரையும் வரவேற்றார். இதில் திமுக வழக்கறிஞரணி மாநில செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி மருத்துவரணி மாநில செயலாளர் எழிலன்நாகநாதன் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி திமுக பொறியாளர் அணி மாநில செயாளர் எஸ்.கே.பி.கருணா வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டிய கடமைகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பாசறை கூட்டத்தின் நிறைவாக மாலை 5 மணிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :-
இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய ஆட்சியை நடத்தி வருகிறது திராவிட மாடல் ஆட்சி, இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய போர்களத்தில் உள்ளோம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
தேர்தல் களத்தில் வெற்றியை பெறுவோம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தோல்வியை தழுவுவார் வரும் நாடாளுமன்ற தேர்தல் நமக்காக காத்திருக்கிறது எனவே வாக்குச்சாவடி முகவர்கள் சென்று மக்களிடம் நமது சாதனைகளை சொல்லுங்கள்.
நாம் பார்த்து பார்த்து எண்ணற்ற தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த இரண்டரை கால ஆட்சியில் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் 1000 கோவில்களில் குடமுழுக்கு செய்தது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
மக்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ1000 வழங்கி வருகிறோம். இத்திட்டத்தினை வாக்களிக்காதவர்கள் மட்டும் நம்மை பாராட்டவில்லை. அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.
திமுக குடும்ப ஆட்சி என்கிறார்கள் கோடிக்கணக்கான தமிழர்களை வாழவைக்கின்ற குடும்ப கட்சிதான்திமுக. வரும் தேர்தல் களம் போர்களம்., இந்தியாவுக்கு முக்கிய தேர்தல்களம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற வேண்டும்.
தினமும் ஒருமணிநேரமாகிலும் கழகத்திற்காக நீங்கள் பணியாற்றுங்கள். வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டுவரும் கோரிக்கைகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கா ஒவ்வொரு திமுகவினரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு முக ஸ்டாலின் பேசினார்.
இந்த வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அமைச்சர்கள் கே.என்.நேரு பொன்முடி செஞ்சி மஸ்தான் ஆர்.காந்தி சக்கரபாணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் சி.என்.அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன் ஒ.ஜோதி எஸ்.அம்பேத்குமார் வசந்தம் கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் சீ.பார்வதி சீனுவாசன் ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் ராஜேந்திரன் வி.பி.அண்ணாமலை பா.ராமஜெயம் சி.மாரிமுத்து த.ரமணன் மற்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நன்றி கூறினார்.