June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

28-ந் தேதி நிகழும் சந்திர கிரகணம்; பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்

1 min read

Lunar eclipse on 28th; Those who need to make amends

26.10.2023
வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்றைய தினம் பரிகாரம் செய்ய வேண்டியவவர்கள் விவரம் இங்கே தருகிறோம்.

கிரகணம்

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சூரியனிடம் இருந்து வரும் ஒளியை சந்திரன் தடுப்பதால் சூரியன் மறையும். இதுதான் சூரிய கிரகணம் ஆகும்.
அதேபோல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முழு நிலவு நாளில் அதன் ஒளிளை பூமியே மறைப்பதுதான்

சந்திர கிரகணம்.

அதன்படி வருகிற 28-ந் தேதி சனிக்கிழமை இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சோப கிருது ஆண்டில் நமது கண்ணுக்கு தெரியும் ஒரே கிரகணம் இதுதான். இதற்கு முன்பு 20.4.2023, 14.10.2023 ஆகிய நாட்களில் நடந்த சூரிய கிரகணம் நம் கண்ணுக்கு தெரியவில்லை. வருகிற 8.4.2023 அன்று நிகழப்போகும் சூரிய கிரகணமும் நமக்குத் தெரியாது.
வருகிற சனிக்கிழமை பவுர்ணமி திதியில் அஸ்வினி நட்சத்திரம் 4ம் பாதம், மேஷ ராசி சிம்ம லக்கினத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 1.05 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகிறது. மத்திய காலமாக 1.44 மணி என கணிக்கப்பட்டு உள்ளது. இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவு பெறும்.
இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜோதிர வல்லுனர்கள் எச்சிரிக்கிறார்கள்.
மேலும் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை பிறந்தவர்களும் சாந்தி செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக கிரகண நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சாப்பிட்டு முடிக்க வேண்டும். கிரகணம் விட்டபின் அதிகாலை 4.30 மணிக்கு கோவில், பூஜை அறையை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்ய வேண்டும்.
கிரகண நேரத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் ஏதும் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த வரை

பழச்சாறாக எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் இந்த சந்திர கிரகணம் நள்ளிரவில் வருவதால் உணவு பிரச்சினை ஏதும் இருக்காது.

கிரகண காலத்தில் வீட்டில் சமைத்த உணவு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களில் தர்ப்பை புல்லை போட்டு வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத நிலையில் சமைத்த உணவு இருந்தால் அதிலும் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *