சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை
1 min read
3 people jailed till death in case of rape of girl
28.10.2023
விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாலியல் பலாத்காரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் கடந்த 23 .5. 2020 அன்று மாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வயலுக்கு சென்றார்
அப்பொழுது அங்கு வந்த கெடார் முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாகேஷ் மகன் விக்னேஷ் வயது 25 முருகேசன் மகன் சுபாஷ் வயது 24 பழனிவேல் மகன் சுபாஷ் வயது 24 ஆகிய மூன்று பேரும் அந்த சிறுமையை வழிமறித்து சுடிதார் வாங்கி வைத்துள்ளதாகவும் அதனை தருவதாக கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்
பின்னர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் அந்த சிறுமியினை தள்ளி மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்
சம்பவம் குறித்து புகாரின் பேரில் விக்னேஷ், எம் சுபாஷ், பி சுபாஷ் ,ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்குசோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஹெர்மீஸ் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்
அதில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ், எம் சுபாஷ், பி சுபாஷ், ஆகியோர்க்கு சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தலா ரூபாய் 15,000 அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்
இதைத்தொடர்ந்து சிறதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டன இவ்வழக்க அரசு தரப்பு வழக்கறிஞராக கலா ஆஜரானார்