கேரள குண்டுவெடிப்பு- புளியரையில் போலீசார் தீவிர சோதனை
1 min readKerala blast- Police intensive search in Puliyarai
30.10.2023
கேரள மாநிலம் எர்ணாகுளம் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக
கேரளாவை ஒட்டியுள்ள தென்காசி , கன்னியாகுமரி கோவை, தேனி, நீலகிரி, மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து
தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. இந்த வாகன சோதனையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ வழிபாட்டு ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து ள்ளார்.அதனை முன்னிட்டு மாவட்ட எல்லைகளில் காவல்துறையால் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக
தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே
அதிகமாக வாகனங்கள் சென்று வருவதால் காவல் துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மிகுந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது.
தற்போது நடைபெற்று வரும் வாகன சோதனையில் புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலையம் ஒன்றிணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் எப்.ஆர்.எஸ் எனப்படும் செயலி மூலம் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை சோதனை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. .நேற்று மாலையில் இந்த சோதனையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் முறையாக சோதித்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். போலீசார் நடத்திவரும் தொடர் சோதனையால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.