May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

டிசம்பர் முதல் வாரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்

1 min read

Prime Minister Narendra Modi is coming to Tamil Nadu in the first week of December

1.11.2023
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வருகின்ற டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வர உள்ளார்.

மோடி

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வருகின்ற டிசம்பரில் ராமேஸ்வரத்துக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது, பாம்பன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில்வே பாலத்தின் முதல் வழித்தடத்தை மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்ததும் பிரதமர் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.