May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

நாணயத்தை தேடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram in search of a coin/ comedy story / Tabasukumar

9.11.2023
கண்ணாயிரம் அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சுற்றுலா பஸ்சில் ஏறினார்.அப்போது அவரை பேமானி என்று பயில்வான் திட்டினார்.
இதற்கு நாணயம் இல்லாதவர் ஒழுக்கம் இல்லாதவர் என்று சுடிதார்சுதா பொருள் சொல்ல கண்ணாயிரம் கையில் நாணயத்தை காட்டி நாணயம் உள்ளவன் என்று சொன்னார்.
ஒழுக்கம் இல்லாதவர் என்று கண்ணாயிரத்தை சொன்னதால் பூங்கொடி கோபம் அடைந்து சுடிதார்சுதா முடியை பிடிக்க சுடிதார் சுதாதாக்கியதில் கண்ணாயிரம் கையில் இருந்த நாணயம் உருண்டு பெண்கள் இருக்கையின் கீழே ஓடியது.
கண்ணாயிரம் அந்த நாணயத்தை எடுக்க இருக்கையின் கீழே குனிந்து தேட முயல பெண்கள்..யாரய்யா இது பெண்கள் இருக்கையின் கீழேவந்து தேடுறது என்று கூச்சலிட்டனர்.
கண்ணாயிரம் நாணயம் நாணயம் என்று கத்த பெண்கள் இருக்கையின் கீழேவந்து தவழ்ந்து தேடுறது நாணயமா என்று கேட்க..ஆமா..நாணயம்தான்.. நாணயந்தான் என்க பெண்களுக்கு கோபம் வந்தது. யோவ் பெண்களுக்கு கீழவளவு தேடுறீய உனக்கு வெட்கமா இல்லையா என்று திட்ட.. கண்ணாயிரமோ.. வெட்கமாத்தான் இருக்கு.. ஆனா நாணயம் வேணுமே.. உருண்டு ஓடின நாணயத்தை எடுக்காவிட்டால் என்னை நாணயம் இல்லாதவன்னு சொல்லிவிடுவாங்களே என்று கண்ணாயிரம் கண்களை கசக்கினார்.

அப்போ இப்போ நீங்க நாணயம் இல்லாதவர்தானே என்று பெண்கள் சொல்ல..ஆ..நான் கால்சட்டைக்குள் நாணயம் வச்சிருக்கேன் என்க..அதை எடுக்க என்று பெண்கள் சொல்ல கண்ணாயிரம் கால்சட்டைபைக்குள் கையைவிட.. நாணயங்கள் இல்லாமல் திடுக்கிட்டார்.
என்னாச்சு..என்று கால்சட்டை பையை துளாவிப் பார்த்தபோது கால்சட்டைபையில் உள்ள ஓட்டை வழியாக காசு கீழே விழுந்திருப்பது தெரிந்தது. அய்யய்யோ நான் இப்போ உண்மையிலே நாணயம் இல்லாதவனாகி விட்டேனே என்று சிணுங்கினார்.
எப்படியும் உருண்டோடிய காசை எடுத்தே ஆகவேண்டும் என்று பெண்கள் காலுக்கடியில் தேடினார்.
அவர்கள் கூச்சத்துடன் கால்களை இருக்கைக்கு மேலே தூக்க கண்ணாயிரம்..அப்பாட…இப்பதான்..நல்லா தெரியுது..நாணயத்தை மட்டும் காணமே எங்கே போச்சு என்று கண்களை கூர்மையாக்கி தேடினார்.
அப்போது சுடிதார்சுதாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த பூங்கொடி பெண்கள் பக்கத்தில் குனிந்து தேடிய கண்ணாயிரத்தைப் பார்த்து அங்கே என்ன தேடுறீய என்று கண்ணாயிரம் முதுகில் பளார் என்று ஒரு அடிவிட்டார்.
கண்ணாயிரம் அம்மாடி என்று கத்தியபடி எழுந்தார். என் நாணயம் என் நாணயம் என்று பதற…பூங்கொடி .. பெண்கள் பக்கத்திலே எங்கே கொண்டு போட்டியிட என்று சொல்ல கண்ணாயிரம் நான் எங்கே போட்டேன்..அதுவா உருண்டோடிட்டு என்க..அதுக்கு வேற இடமே தெரியலையா என்றபடி பூங்கொடி.. அந்த பக்கத்தில் குனிந்து தேடி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தார்…. ஏங்க..நான் உடனே தேடி எடுத்துட்டேன்..நீங்க பெண்கள் பக்கத்திலே தேடுற மாதிரி.. இவ்வளவு நேரமும் நடிச்சியளா என்று முறைத்தாள்.
கண்ணாயிரம்..ம் எனக்கு நடிக்கத் தெரியாது..பள்ளிக் கூடத்திலே நாடகம் போட்டப்பவே எனக்கு நடிக்கத்தெரியாதுன்னு சொல்லி நாடகத்திலே சேர்க்க மறுத்திட்டாங்க தெரியுமா என்று அசடுவழிய.. சும்மா நடிக்காதீங்க என்று பூங்கொடி கண்ணாயிரம் காதை திருகி அவரது இருக்கைக்கு இழுத்துச் சென்றார்.
பயில்வான்..அப்பாட ஒருவழியா சண்டை ஓஞ்சிட்டு..தப்பிச்சோம்..சரி..அடுத்த சண்டை வருவதற்குள் புறப்பட்டு விடுவோம் என்று நினைத்தார்.சுடிதார் சுதா பூங்கொடி தன் முடியை பிடித்து இழுத்த கோபத்தில் பேமானி..பேமானி என்று திட்டிவிட்டு தன் இருக்கையில் இருந்தாள்.
அதைக் கேட்ட பூங்கொடி..ம் மீண்டும் சொல்லுறீயா என்று ஆவேசமாக எழ..பயில்வான் தலையிட்டு அம்மா தாயே..இனி மெட்ராஸ் பாசை பேச வேண்டாம்..என்று சுடிதார் சுதாவிடம் சொல்லிவிட்டு பூங்கொடியை அமைதி படுத்தினார்.ஏங்க..இனியாரும் சத்தம் போடக் கூடாது..பஸ் புறப்படப் போகுது..எல்லோரும் ஒரு ஓ போடுங்க..என்று சொல்ல எல்லோரும் ஓ என்று கோஷமிட பஸ் உற்சாகமாக புறப்பட்டது.
பஸ் புறப்பட்டதும் மீண்டும் மழை வந்தது. கண்ணாயிரத்துக்கு ஓ போடுன்னாரே பயில்வான்..அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கத் தோன்றியது.. பயில்வானைப்பார்த்து அந்த ஓ.. என்று ஆரம்பிக்க..பயில்வான் ஓடிப்போய்…அவர் வாயைப் பொத்தி..வாயைத் திறக்கக் கூடாது என்று எச்சரித்தார்.
கண்ணாயிரமும் அமைதியானார். பூங்கொடி முகத்தை தடவியபடி..அந்த சுடிதார் சுதா என் முகத்திலே பிறாண்டிப் போட்டா..காந்துது..எல்லாம் உங்களால வந்த வினை..என்க கண்ணாயிரமோ..எல்லாம் மெட்ராஸ் பாசையிலே வந்த வினை..புரியாத பாசையிலே திட்டுனா கோபம் வருமா வராதா..என்று கண்ணாயிரம் நியாயம் கேட்டார்.
அப்போது சுற்றுலா பஸ்சில் டிவியில் ஒரு பாட்டு ஒலிபரப்பானது..
அந்த பாடல்..வா வாத்யாரே ஊட்டாண்டே..நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம் பஜார் ஜக்கு நான்
சைதாப் பேட்டை கொக்கு
நைனா உன் நினைப்பாலே நான்
நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் உன்மூஞ்சப் பார்த்தேன்
சால்னா நினைப்பு வந்தாச்சு..
ஆயாக்கடை இடியாப்பபோன்னா
பாயாக்கறியும் நீயாச்சு..
ஜாம்பஜார் ஜக்கு..நான்
சைதாப்பேட்டை கொக்கு…என்று பாட்டு போய்க்கொண்டு இருந்தது.
கண்ணாயிரம் வேகமாக எழுந்தார். ஏற்கனவே உள்ள மெட்ராஸ் பாசைக்கே அர்த்தம் புரியல..இப்ப இந்த பாட்டா..என்று முழங்க பயில்வான்..போச்சு..போச்சு..ஏம்பா..டிவியை நிப்பாட்டு..வேற பாட்டு போடு என்க.. உதவி டிரைவர் டிவியை நிறுத்தினார்.
எதுக்கு வம்பு..வேற பாட்டப் போட்டா அதுக்கும் பிரச்சினை வரும் ..நைட்டாகட்டும் ..அப்புறம் பாட்ட போடுவோம் என்றார்.

கண்ணாயிரம்..அந்த பயம் இருக்கணும்.ஏற்கனவே கஸ்மாலம்..சாவுகிராக்கிக்கு பொருள் தெரியல..புலம்பிக்கிட்டு இருக்கேன்..நான் என்ன செய்வேன் என்றார் கண்ணாயிரம்.அவரிடம் அது தெரிஞ்சு என்னப் பண்ணப் போறீங்க..பேசாம இருங்க..ஊரிலே போய் பாத்துக்குவோம் என்க கண்ணாயிரம்.சரி..சரி..தயிர்சாதம் சாப்பிட்டது..கண்ணைக்கட்டுது.. ஒரு பாட்டு பாரேன்..தூங்கிடுறன் என்றார். அப்புறம்..வேண்டாம்..வேண்டாம்..நானே பாடுறன் என்றபடி பாடினார்..
வாராய்..நீ வாராய்..
போகுமிடம் வெகு தூரம் இல்லை..நீ வாராய்..வாரா..வா..வா..ரா..ரா.ரா..என்று பாடிய கண்ணாயிரம் கொட்டாவி விட்டபடி..ஊ..ஊ..ஊ..என்று உளையிட..
யாரய்யா நரி மாதிரி கத்துறது என்று சொல்ல அதை கேட்காமலே கண்ணாயிரம் குறட்டைவிட்டார்.. பஸ் குலுங்கி குலுங்கி சென்றது.
சுடிதார்சுதா மெல்ல..மலையிலே ஏறும் போதுதானே வாராய் என்ற பாடலைப் பாடணும்..மலையிலிருந்து இறங்கும் போது அந்த பாட்டைப் பாடலாமா.. அது தப்பில்லையா என்க..பயில்வான்..தாயே அமைதி..கண்ணாயிரத்துக்கு கேட்டா..மீண்டும் மலை உச்சிக்கு போகச் சொல்வான்..சத்தம் போடாதே என்றார்.
சுடிதார் சுதாவும் அமைதியானார்.
மழை கொட்டியது.பஸ் மெதுவாக நகர்ந்தது. இருட்டத் தொடங்கியது. மலை பகுதியில் பஸ்சை ஓட்ட டிரைவர் சிரமப்பட்டார். ரோடெல் லாம் தண்ணீர் பெருகி ஓடியது. கண்ணாயிரம் உருண்டு புரண்டு படுத்தார். மழைநீரில் குளித்தது வேறு அவரது கண்களை தூக்கம் தழுவியது..எல்லோரும் உற்சாக மூடில்..பாடல்களை முணுமுணுத்தபடி இருந்தனர். பஸ் அங்கும் இங்கும் தள்ளாடியபடி செல்ல துபாய்க்காரர்..பாத்துப் போ..பாத்துப்போ..என்று பாடிய நேரத்தில் டம..டம..டம..என்ற சத்தம்..சுற்றுலா பஸ்தள்ளாடி தள்ளாடி..சென்று படக்கென்று ரோட்டில் கவிழ்ந்தது.
எங்கும் ஒரே அலறல் சத்தம்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.