June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அந்தமான் காதலி, நாளைநமதே படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் சந்திரமோகன் காலமானார்

1 min read

Telugu actor Chandramohan, who starred in films like Andaman Lover and Kaami Namade, passed away

11.11.2023
பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (வயது 82) உடல்நலக்குறைவால் காலமானார்.

தெலுங்கு நடிகர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்திரமோகன். இவர் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் அந்தமானம் காதலி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாக நடித்தார். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘நாளை நமதே’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்து புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவர் தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இதயநோய் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 11) காலை உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு ஐதராபாத்தில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *