9 மாவட்டங்களில் 4,272 அடுக்குமாடி குடியிருப்புகள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
1 min read
4,272 flats in 9 districts- CM Stalin inaugurated
20.11.2023
கூட்டுறவுத்துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு அம்மக்களின் 60 ஆண்டு கால கோரிக் கைக்கு தீர்வு காணப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, 7 பயனா ளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
மேலும், 14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள திருவட்டார், கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தேனியில் கூட்ட ரங்கக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் கே.ஆர்.பெரியக் கருப் பன், ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.