June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. எம்.பி. சர்ச்சை பேச்சு- மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

1 min read

DMK MP Controversial Speech- Condemnation of M.K.Stalin

6.12.2023
தி.மு.க, எம்.பி., செந்தில்குமார் கூறிய சர்ச்சை கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டணியில் உள்ள வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கிடையே செந்தில்குமார் மன்னிப்பு கோரினார்.

மாட்டு மூத்திர மாநிலங்கள்

ஹிந்தி பேசும் மாநிலங்கள், அதாவது, ‘மாட்டு மூத்திர மாநிலங்களில் தான் பா.ஜ., வெல்ல முடியும்’ என பாராளுமன்றத்தில் தி.மு.க., – எம்.பி. செந்தில் குமார் பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இவருடைய பேச்சுக்கு பாஜ.க. தரப்பில் கண்டங்கள் குவிந்து வருகின்றன.

தி.மு.க, எம்.பி., செந்தில்குமார் கூறிய சர்ச்சை கருத்துக்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் உள்நோக்கத்துடன் கூறவில்லை என்று கூறி அதற்காக மன்னிப்பும் கோரினார்.

எம்பி செந்தில் குமாரை முதல்வர் ஸ்டாலின் கண்டித்தார் எனவும், பொது வெளியில் கருத்துக்களை சொல்லும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும் அறிவுரை வழங்கினார் என தி.மு.க.,வின் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
அதேநேரத்தில் திமுகவின் கூட்டணியில் உள்ள வைகோ எம்.பி., செந்தில் குமார் கருத்தை, நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் சொல்வது சரிதான்” எனக் கூறியுள்ளார். ஸ்டாலின் கண்டித்த எம்.பி.,க்கு, கூட்டணியில் உள்ள வைகோ ஆதரவு தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

லோக்சபாவில் இன்று(டிச.,06) தனது வார்த்தைகளை திரும்பப்பெறுவதாகவும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்பி செந்தில் குமாரை முதல்வர் ஸ்டாலின் கண்டித்தார் எனவும், பொது வெளியில் கருத்துக்களை சொல்லும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும் அறிவுரை வழங்கினார் என தி.மு.க.,வின் ஆர்.எஸ். பாரதி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *