July 19, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் மின் மயானத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

1 min read

Request to open a cemetery in Red Fort Demonstration

11/12/2023

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்காமல் உள்ள மின்மயானத்தை உடனடியாக திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்காமல் உள்ள மின்மயானம் மற்றும் முத்துசாமி கரையாளர் பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள செங்கோட்டை நுழைவு வாயிலில் உள்ள ஆர்ச்சை அப்புறப்படுத்த வேண்டும். மேலூர் பகுதியில் மக்களுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும். மேலும் செங்கோட்டை வாரச்சந்தை, வணிக வளாகம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை தாலுகா குழு செயலாளர் பி. வேலுமயில் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் என். பால்ராஜ் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. கணபதி முடித்து வைத்து பேசினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.ஆயிஷா டி. வன்னிய பெருமாள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் எம்.முருகேசன், வீ.பழனி, எஸ்.மல்லிகா மற்றும் கிளை செயலாளர்கள் ஆர்.முருகன், எம்.முகமது காசிம், பி.முத்துசாமி, கே.சின்னச்சாமி, எம்.சையதுமசூது, எஸ்.செல்வி, எம்.சுமதி, பி.ராஜகோபால் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மேலூர் கிளைச் செயலாளர் எம்.சங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *