அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு குற்றாலத்தில் இருந்து புனித நீர்
1 min read
Holy water from the shrine for Kumbabishekam in Ayodhya Rama temple
12.12.2023
அயோத்தியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் வரும் ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் தென்காசி பாஜக நிர்வாகிகள் குற்றாலம் அருவியில் இருந்து புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் ஜனவரி 22 இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு குற்றாலம் புனித தண்ணீர் தீர்த்தமாக அடைத்து காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்று அயோத்திக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் சுவாமி அகிலாண்ட மகராஜ் ஆசியுடன் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர தலைவர் மந்திரமூர்த்தி,
நகர துணை தலைவர் நாராயணன்,நகர துணை தலைவர் லெட்சுமண பெருமாள், மற்றும் பாஜக கவுன்சிலர் சங்கர் சுப்பிரமணியன், 15 வது கவுன்சிலர் ராஜ்குமார், கட்டுறவு பிரிவு மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி, இந்துமுன்னணி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் இந்து முன்னணி நகர தலைவர் தளவாய், விஹெச்பி மாவட்ட செயலாளர் சபரி மணி, நநகர தலைவர் சுபாஷ் பாஜக கிளை தலைவர் ராஜ்குமார், பாஜக நகர பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாஜக வார்டு தலைவர் வி கே பரமசிவம், மற்றும் நம்பி மற்றும் சூர்யா மற்றும் ஆர்எஸ்எஸ் பிஜேபி விஹெச்பி இந்து முன்னணி அனைத்து அமைப்பை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் அறுபடை நிகழ்ச்சி தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய ரத வீதியில் வழியாக பஜனை நடத்தி புனித நீர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.