June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்துக்குள் தாக்குல்-8 பணியாளர்கள் சஸ்பெண்ட்

1 min read

Thakul-8 employees suspended in Parliament

14.12.2023
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மக்களவை நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
இதனால் மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மக்களவை கூடியது. அப்போது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்கிடையே 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *