தென்காசி – அம்பை சாலை மறியல் போராட்டம் ரத்து
1 min read
Tenkasi-Ambhai road picket strike cancelled
27.12.2023
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தென்காசி அம்பை சாலையில் 27.12.2023 ல் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்ப்பட்டால் சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கடையம் அருகில் உள்ள இரவண சமுத்திரம், முதலியார்பட்டி,
வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், கோவிந்தபேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள, திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள சாலை, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு பல மாதங்களாகியும் ரோடு, அமைக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருந்ததால், விபத்துக்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. எனவே இந்த தார் சாலையை உடனடியாக அமைக்க கோரி,
டிசம்பர் 16ஆம் தேதி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், ரவணசமுத்திரத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,
டிசம்பர் 27 அன்று காலை 10 மணி அளவில், அனைத்து அரசியல் கட்சிகள், ஆறு கிராம பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆகியோரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது சம்பந்தமாக கடையம் காவல் நிலையத்தில் 26.12.2023 அன்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர், ரவண சமுத்திரம் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல் தலைவர் கனி, மஸ்ஜிதுல் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யதப்பா, வீராசமுத்திரம் காதர் ஒலி பள்ளிவாசல் தலைவர் காஜா மைதீன், முதலியார் பட்டி நயினார் முஹம்மது பள்ளிவாசல் செயலாளர் நவாஸ் கான், பொருளாளர் ஹசன், முதலியார்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், மாலிக் நகர் பள்ளிவாசல் பொருளாளர் முகமது யாகூப், மமக மாவட்ட துணைச் செயலாளர் கோதர்மைதீன், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சித்திக், முதலியார்பட்டி நகர தலைவர் காலித், ஐமுமுக மாவட்ட பொருளாளர் ஹயாத் அன்ஸர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பழக்கடை சுலைமான்,
எஸ்டிபிஐ முதலியார் பட்டி நகர செயலாளர் மீரான், ஆகியோரும், மற்றும்
கோவிந்த பேரி சாலை ஒப்பந்ததாரர் வினோத், ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது கடையம் காவல் நிலைய துணை ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இன்று முதல் உடனடியாக வேலையை தொடங்கி இரண்டு மாத காலத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலையப்பபுரம் கோவிந்தப்பேரி சாலையில் முழுவதுமாக தார்சாலை அமைத்து தருவதாக ஒப்பந்ததாரர் வினோத் ஒப்புக்கொண்டார். எனவே தற்காலிகமாக பள்ளங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் சரிசெய்யும் பணி தொடங்கியது. மீதமுள்ள பகுதிகளில் விரைந்து சாலையை அமைத்து இரண்டு மாதத்திற்குள் சாலையை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.