June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

1 min read

A bison that fell into a well near Tenkasi was rescued alive

27.12.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் மலை அடிவாரத்தில் கிணற்றில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் கோவில் மலை அடிவாரத்தில் முகமது இஸ்மாயில் என்பவரது கிணற்றில் நேற்று
ஒரு டன் எடையுள்ள காட்டு எருமை விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர்கள் கே செல்வன், கே வி மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சே சந்திரமோகன், மு ராம்குமார், ஆர் ராஜா, து. இசக்கி துரை, ஆர் கோமதி சங்கர் ஆகியோர் விரைந்து சென்று பார்த்த போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த காட்டு எருமை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காட்டெருமையை உயிருடன் மீட்டு வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த காட்டெருமையை விரைந்து வந்து உயிருடன் மீட்ட வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *