June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மாபெரும் இரத்ததான முகாம்

1 min read

A massive blood donation camp in South Kashmir

7.1.2024
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனை மற்றும் தென்காசி மாவட்ட அனைத்து இரத்த தான கூட்டமைப்பு இணைந்து தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்ட இணை இயக்குநர் டாக்டர் பிரமலதா தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகிக்க அனைத்து இரத்ததான கூட்டமைப்பின் ஒருங் இணைப்பாளர்களின் சீரிய முயற்சியில் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கினர்.

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனை இரத்த நிலைய மருத்துவர் டாக்டர் பாபு மற்றும் குழுவினர் இரத்தம் சேகரித்தனர். உறைவிட மருத்துவர் டாக்டர் செல்வபாலா, கலந்து சிறப்பித்தனர். 25க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூக கொடையாளர்களும் தங்கள் குருதியை தானமாக வழங்கியது இந்த முகாமின் சிறப்பு அம்சமாக அமைந்தது. முகாமில் குருதி கொடையாளர்கள் மற்றும் குருதி தான ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ் மற்றும் மரகன்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *