குற்றாலத்தில் கெட்டுபோன பேரிச்சம்பழம்,அல்வா,சிப்ஸ் அழிப்பு
1 min read
Destruction of spoiled dates, alva, chips in the yard
8.1.2024
குற்றாலத்தில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன தரம் குறைந்த பேரிச்சம்பழம் சிப்ஸ் மஸ்கோத் அல்வா போன்ற உணவுப் பொருட்களை தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிர மணியன் அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.
குற்றாலத்தில் ஐயப்ப சீசனை முன்னிட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருகை தருகிறார்கள் அவர்கள் குற்றாலம் பஜாரில் விற்பனை செய்யப்படுகின்ற பேரிச்சம்பழம், வாழைக்காய் சிப்ஸ் மஸ்கோத் அல்வா போன்ற உணவுப் பொருட்களை கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
நாள்தோறும் டன் கணக்கில் விற்பனையாகும் பேரிச்சம்பழம், மஸ்கோத் அல்வா, வாழைக்காய் சிப்ஸ் போன்ற பொருட்கள் தரம் குறைந்ததாகவும் கலப்படம் நிறைந்ததாகவும் கெட்டுப் போனதாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் நேற்று குற்றாலம் சன்னதி பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிரடியாக சோதனை நடத்தினார் அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பேரீச்சம் பழம் தரம் குறைந்ததாகவும் கெட்டுப் போனதாகவும் மஸ்கோத் அல்வா ரசாயன கலப்படம் மற்றும் கெமிக்கல் சேர்க்கப்பட்டும் இருந்தது. மேலும் வாழைக்காய் சிப்ஸ் உற்பத்தி தேதி எதுவும் இல்லாமல் தரம் குறைந்து காணப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் அந்த சிப்ஸ் கடை மற்றும் அவர்களது குடோனில் இருந்த இரண்டு டன் மஸ்கோத் அல்வா இரண்டு டன் எடையுள்ள பேரிச்சம்பழம் மற்றும் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்கள் இல்லாத ஒரு டன் சிப்ஸ் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நாகசுப்பிரமணியன் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.
இந்த ஆய்வின் போது குற்றாலம் காவல்துறை யினர் மற்றும் குற்றாலம் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற கலப்படம் நிறைந்த கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்து வரும் பொருட்களை பறிமுதல் செய்து அதனை பினாயில் ஊற்றி அழித்ததோடு அந்த வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்ட தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனை பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.