June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி கல்லூரி முன்னாள் மாணவா் சங்க செயற்குழு கூட்டம்

1 min read

Alwarkurichi College Ex-Students Association Executive Committee Meeting

8.1.2024

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க செயற்குழு கூட்டம் குற்றாலம் ஐந்தருவியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவா் எஸ்.வி.பெருமாள் தலைமை வகித்து சங்கத்திற்கான புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வா் எஸ்.மீனாட்சிசுந்தா்,சங்கத்துணைத் தலைவா் எஸ்.தங்கம்,துணைப் பொதுசெயலா் எஸ்.முருகேசன் முன்னிலை வகித்தனா்.முன்னாள் மாணவர் சங்க
பொதுச் செயலாளர் எம்.முகைதீன்பிச்சை அனைவரையும் வரவேற்றாா்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரியில் கல்விகட்டணத்தை செலுத்த முடியாதநிலையில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு, மாணவா்களின் மூன்று ஆண்டுகால கல்வி செலவுகளை முழுமையாக செலுத்தவது,

மாணவ,மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம், போட்டித்தோ்வுகளில் கலந்துகொண்டு எளிதாக தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின்
செயற்குழு உறுப்பினா்கள் சங்கரலிங்கம், அருள்ராஜ், காந்திமதிநாதன்,ஹரிகிருஷ்ணன்,அருமைராஜ்,சக்தி , செய்யதுசுலைமான், சக்திவேல்,வட்டார செயலா்கள் அம்பலவாணன் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில்
பொருளாளா் கே.சிவசங்கா் அனைவருக்கும் நன்றி கூறினாா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *