May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர்: போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு- புதிய தமிழகம் நிர்வாகிகள்2 பேர் கைது

1 min read

Kadayanallur: Expropriation of land through fake documents- 2 new Tamil Nadu administrators arrested

10-.1.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே போலியாக ஆவணம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரித்த புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் வடக்கு விளை காலனி தெருவை சேர்ந்தவர் முருகையா இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவருக்கு சொந்தமான சொத்தை, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள்ளான


குமந்தாபுரம் வைரவன் மகன் பொன்னையா( வயது 65), கோபாலகிருஷ்ணன் மகன் ராஜா (வயது 45) ஆகியோர் போலியான ஆவணங்களை தயாரித்தும் ஆள்மாறட்டும் செய்தும் கடையநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் பொன்னையா தன் பெயருக்கு கிரையம் முடித்து அதன் பின்னர் பொன்ணையா மனைவி வள்ளியம்மாள் பெயருக்கு ஏற்பாடு ஆவணமாக கொடுத்துள்ள விபரம் தெரிய வந்ததுள்ளது..

இதையடுத்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் அளித்திருந்த நிலையில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லையாம்

எனவே இது பற்றி பாதிக்கப்பட்ட மாரியம்மாள் தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீதிபதி பொன்பாண்டி இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது அதன் அடிப்படையில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா வழக்குப்பதிந்து, போலி ஆவணம் தயாரித்தும் ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்த பொன்னையா தனது மனைவிக்கு ஏற்பாடு ஆவணமாக தயார் செய்ததாக பொன்னையா மற்றும் ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜா கடையநல்லூர் வடக்கு ஒன்றிய புதிய தமிழகம் கட்சியின் செயலாளராகவும் பொன்னையா தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் விவசாய அணி தலைவராகவும் இருந்து வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.