May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி செங்கோட்டை பள்ளிக்கு 9.5 லட்சம் நிதியுதவி

1 min read

9.5 lakhs for Aditya L1 Project Director Nigar Shaji Sengottai School

10/1/2023
ஆதித்யா எல்.1 திட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக அதன் திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி தான் படித்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆரியநல்லூர் ஆரம்ப பள்ளியின் காம்ப்பவுண்ட் சுவர் மற்றும் கட்டிட மேம்படுத்தல் வேலைகளை செங்கோட்டை நகராட்சி நமக்கு நாமே திட்டம் மூலமாக சுமார் 4.5 லட்சம் செலவில் செய்வதற்கான சேவை நிதியான 1.5 லட்சம் ரூபாயும்,

மேலும் தான் படித்த செங்கோட்டை எஸ்.ஆர்.எம்.பெண்கள் உயர் நிலை பள்ளியில் சுமார் ரூபாய் 24 லட்சம் செலவில் , செங்கோட்டை நகராட்சி நமக்கு நாமே திட்டம் மூலமாக ஒரு அறிவியல் மற்றும் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான சேவை நிதியான 8 லட்சம் ரூபாயும் இன்று வழங்கி தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த 9.5 லட்சம் ரூபாய் காசோலை நிகார் ஷாஜியின் சார்பாக அவரது சகோதரர் முன்னாள் பேராசிரியரும் , முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான முனைவர் ஷேக்ஸலீம் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சுகந்தியிடம் நேற்று வழங்கியுள்ளார்.

கடையநல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் டாய்லட் வசதி செய்வதற்காக 1.5 லட்சம் ரூபாய் ஏற்கனவே (நமக்கு நாமே திட்டம் மூலமாக 4.5லட்சமாக) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை எஸ்.ஆர்.எம்.பெண்கள் உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி,
ஆரியநல்லூர் ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளமண்ட் மற்றும் நகராட்சி முதன்மை பொறியாளர் அபுபக்கர், மேனேஜர் கண்ணன், தென்காசி மீரான் மருத்துவமனை டாக்டர் அப்துல் அஜீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2 ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா ட1 அது சென்று சூரியனை ஆய்வு செய்து அனுப்பவேண்டிய இலக்கான L1 ( லக்கிராஜ்ஜியன் எல்1) இடத்தை திட்டமிட்டபடி அடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நமக்கு நாமே திட்டம் மூலமாக இந்த சேவைகள் செய்வதற்கான ஆலோசனை வழங்கிய கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை நகராட்சி ஆணையர் சுகந்தி மற்றும் செங்கோட்டை நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் நிகார் ஷாஜி சார்பாக நன்றி தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.