தோரண மலையில் சுற்றுலா பொங்கல் விழா
1 min read
Tourism Pongal Festival at Thoranamalai
13/1/2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பழமையும் புராண சிறப்புமிக்க இந்த கோவில் சித்தர்கள் முனிவர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் சுற்றுலா பொங்கல் விழா 2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரும்பு காய்கறிகள் படையல் இட்டு புத்தரிசியில் பொங்கல் சிறப்பாக விடப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிலம்பம் கும்மியாட்டம் பாண்டி விளையாட்டு மியூசிக் சேர் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.தமிழர்களின் பாரம்பரியமான மாட்டு வண்டி அலங்கரிக்கப்பட்டு மாணவர்களை அதில் ஏற்றி அழைத்துச் சென்றது மாணவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை மதிய உணவு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார். தென்காசி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சீதாராமன் நன்றி கூறினார்.