June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் கிருஷ்ணா புரம் கோயில் தேரோட்டம் 

1 min read

Kadayanallur Krishna Puram Temple Chariot.

24.1.2024

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ முப்பிடாதி அம்மன் மற்றும் ஸ்ரீகல்லகநாடி  அம்மன் கோயில் தேரோட்டம்   நடைபெற்றது.

இக்கோயிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன .

விழாவின் 9ஆம் நாளான நேற்று    மதியம் 1.30 மணியளவில் ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர்  புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எல்லாருக்கும் சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமபகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *