April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆவியாக பயமுறுத்திய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram as a ghost/ comedy story / Tabasukumar

27.1.2024
கண்ணாயிரம் விபத்தில் இறந்துவிட்டதாக ஜவுளிக்கடைக்காரர் மோட்டார் சைக்கிள் வாலிபரிடம் கூற அவர் நினைவஞ்சலி போஸ்டர் அடித்தார். தாரைத் தப்பட்டைக்கு ஏற்பாடு செய்து மாலைகளுடன் நண்பர்களை திரட்டி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தார்.
ஜவுளிக்கடைக்காரர் கண்ணாயிரத்துக்கு கொடுத்த கடனை வசூல் பண்ணுவதற்காக, தான் வருவதற்கு முன்பு பாடியை எடுக்கக் கூடாது.. பாத்துக்க என்று சொன்னார். இதனால் மோட்டார் சைக்கிள் வாலிபர் அவர் சொன்னதை நிறைவேற்றுவதில் குறியாக இருந்தார்.
இந்த வேளையில் கண்ணாயிரம் மறுமணம் செய்வதாக கண்ணாயிரம் நண்பர்கள் சொன்னதாக நம்பி கோபத்தில் வந்த அருவாஅமாவாசை கண்ணாயிரத்திடம் அதை கேட்க கண்ணாயிரம் ஒரு பதில் சொல்ல ஒரே டென்சன். இறுதியில் கண்ணாயிரம் மறைந்துவிட்டபதாக போஸ்டர் அடித்தவர்களை தாக்க அருவாஅமாவாசை அருவாளுடன் ரோட்டில் ரகளை செய்தார். போஸ்டர் அடித்த மோட்டார்சைக்கிள் வாலிபர் வந்து சிக்க அவரிடம் கேட்டபோது ஜவுளிக்கடைக்காரர் சொன்னார் என்க.. அவரிடம் அருவாஅமாவாசை போனில் கேட்டபோது கண்ணாயிரம் போய்விட்டதாக ஆஸ்பத்திரி வார்டில் சொன்னதாகச் சொல்ல
.கண்ணாயிரம் உயிரோடு இருப்பதாக அருவாஅமாவாசை சொல்ல.. அதிர்ச்சி அடைந்த ஜவுளிக்கடைக்காரர் போனை கட்பண்ணினார்.
இதில் கோபம் அடைந்த அருவா அமாவாசை.. ச்சே… கட்பண்ணிட்டானே இதை வேறமாதிரி மாத்துவோம்.. ஏய் மோட்டார்சைக்கிள் தம்பி.. இங்கே பார்.. ஜவுளிக்கடைக்காரரிடம் எல்லாம் சொல்லியாச்சு.. எது செய்யணுமுன்னாலும் உங்கிட்டச் சொல்லச் சொல்லிட்டாரு.. அதனால நீ என்னப்பண்ணுற.. கண்ணாயிரத்துக்கு இதய அஞ்சலி போஸ்டர் அடிச்சால்ல.. அதை மாத்தி அடி என்றார். உடனே மோட்டார்சைக்கிள் வாலிபர்.. உ.. எப்படி அடிக்கிறது.. வருந்துகிறோம். கண்ணாயிரம் உயிரோடு இருக்கிறார் இப்படிக்கு
நடுத்தெரு வாலிபர்கள் சங்கம் என்று அடிக்கவா என்று கேட்டார்.
அருவா அமாவாசை.. ஏய்..அப்படி அடிச்சிடாத. கண்ணாயிரத்துக்கு இன்னைக்கு பிறந்த நாள்.. அதனால எப்படி அடிக்கிற தெரியுமா..
வாழ்த்துகிறோம்.
பொன்விழா கொண்டாடும்..ம் அது வேண்டாம். பொன் விழான்னா என்னன்னு கேட்பான்.. கண்ணாயிரத்துக்கு விளக்கம் சொல்லிமுடியாது..
அதனால.. ஐம்பதாவது பிறந்த நாளை கொண்டாடும் கண்ணாயிரம் நூறாண்டு வாழ்க .. அப்படின்னு அடி என்று சொன்னார்.
அதைக்கேட்ட மோட்டார் சைக்கிள் வாலிபர்..ஆ நல்ல ஐடியா.. இதய அஞ்சலி போஸ்டர் பக்கத்திலே பிறந்த நாள் போஸ்டரை ஒட்டிடலாம். மக்கள் இரண்டு போஸ்டரையும் பாத்துக்குவாங்க என்றார்.
அருவா அமாவாசை கோபமாகி ஏய்.. அப்படி செய்யாதடா என்க மோட்டார் சைக்கிள் வாவிபர்.. பிறகு என்ன செய்யமுடியும்..அவ்வளவு போஸ்டரையும் போய் கிழிக்கமுடியுமா..என்று கேட்க அருவா அமாவாசையோ.. ஒய்.. இதய அஞ்சலி போஸ்டரை ஏன் கிழிக்கிற.. அதுக்கு மேல..கண்ணாயிரம் பிறந்தநாள் போஸ்டரை ஒட்டு.. சரியாப் போகும் என்றார்.
அதற்கு.. மோட்டார் சைக்கிள் வாலிபர்.. போஸ்டர் கலர்புல்லா அடிச்சிடுவோம்..காசு கொடுங்க என்று சொல்ல.. ஏய்.. அதான் ஜவுளிக்கடைக்காரர் எல்லா செலவையும் பாத்துக்கிடுறேன்னு என்னிடம் சொல்லிட்டாரே.. நீ போஸ்டர் அடிச்சிட்டு அவருக்கிட்ட வாங்கிக்க என்று சொன்னார்.
உடனே..ஆ.. அது முடியாது.. நினைவஞ்சலி போஸ்டர்தான் என்னை அடிக்கச் சொன்னார். பிறந்த நாள் போஸ்டர் அவர் அடிக்கச் சொன்னா அடிக்கிறேன் என்று சொல்ல அருவாஅமாவாசை.. சரி..ஜவுளிக்கடைக்காரரிடம் வேண்டுமானால் போனில் கேட்டுப் பாரு என்றார்.
மோட்டார்சைக்கிள் வாலிபர் செல்போனை எடுத்து ஜவுளிக்கடைக்காரரிடம் பேச முயல.. ரிங் வந்ததைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர் அருவாஅமாவாசை மோட்டார் சைக்கிள் வாலிபரின் போனில் பேசுவதாக நினைத்து ம்.. இந்த போனில் வந்தா நான் ஏமாந்துவிடுவேனா.. அருவாஅமாவாசையிடம் சிக்குவேனா.. நல்லா ரிங்போகட்டும்.. நான் எடுக்க மாட்டேன்.. என்று சொல்லியபடி இருந்தார்.
ஜவுளிக்கடைக்காரர் போனை எடுக்காததால் மோட்டார் சைக்கிள் வாலிபர்..ம் ஏன் எடுக்கலை.. தெரியலையே.. அவரிடம் கேட்காமல் செய்தால் பணம் தரமாட்டாரே.. நடுத்தெரு வாலிபர்கள் சங்க தலைவர் பொருளாளர் எல்லாம் ஜவுளிக்கடைக்காரர் தானே .. என்று முணுமுணுத்தார்.
அதைப் பார்த்த அருவா அமாவாசை..என்னப்பா யோசிக்க.. அவர்தான் என்னிடம் போனில் எல்லாம் சொல்லிட்டாரே..அதான் உன்னிடம் பேசமாட்டேங்கிறாரு.. நான் பேசட்டுமா என்றபடி ஜவுளிக்கடைக்காரர் நம்பருக்கு போன் போட்டார்.
அவர் உஷாராக எடுக்கவில்லை. ஆனாலும் அருவாஅமாவாசை சமாளித்துக்கொண்டு.. ஆ..சரி.. பரவாயில்ல..அப்புறம்..வர்ரீங்களா.. சரி என்று தனக்குத் தானே பேச.. மோட்டார்சைக்கிள் வாலிபர்.. கொடுங்க.. கொடுங்க போனை என்று கேட்க.. அருவா அமாவாசையோ உஷாராகி.. ஏப்பா.. அவர் உன்னிடம் பேச விரும்பலையாம்.. நீ செலவு பண்ணிட்டு அவரிடம் வாங்குவியாம் என்றார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர்.. அப்படியா.. ஆனா.. கண்ணாயிரம் உயிரோட இருக்காருன்னு நான் எப்படி நம்புறது.. காலையிலே பேப்பர் போஸ்டருல கூட.. சுற்றுலா சென்ற புதுவை முதியவர் பலி என்று போடப்பட்டிருந்ததே.. படம் கூட போட்டிருந்தாங்க.. கறுப்பு போஸ்டர் என்கிறதாலே படம் சரியாகத் தெரியல என்றார்.
அதற்கு அருவா அமாவாசை.. ஏய் கண்ணாயிரம் மாமன் சொல்லுறேண்டே.. கண்ணாயிரம் உயிரோட இருக்கான் நம்பு என்க மோட்டார் சைக்கிள் வாலிபரோ நான் பேப்பர் சொல்லுறதைத்தான் நம்புவேன்.. புதுவை முதியவர் பலின்னு போட்டிருந்துச்சே என்க.. அருவா அமாவாசையோ..ஏய்.. கண்ணாயிரம் முதியவரா..அவனுக்கு இன்னைக்குத்தான் ஐம்பது வயசு பிறக்குடா..அவன் முதியவன் இல்லடா.. அறுபது வயசுக்கு மேலேத்தான் முதியவர்டா.. என்க மோட்டார்சைக்கிள் வாலிபரோ..பேப்பர் சொல்லுறதைத்தான் நம்புவேன்.. பேப்பரில தப்பா போடமாட்டாங்க.. என்க.. அருவாஅமாவாசைக்கே சந்தேகம் வந்துவிட்டது.
நான் பார்த்தது கண்ணாயிரம் ஆவியா இருக்குமோ.. ச்சே.. இருக்காது.. கண்ணாயிரம் காதைத்தான் நான் நறுக்குன்னு கடிச்சேனே..அவன் ஆ என்று கத்தினானே.. பிறகு எப்படி..ஆவியா இருக்கமுடியும். பேப்பரில வேற போட்டிருக்கான்னு சொல்லுறான்..குழப்பமா இருக்கே என்று விழித்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர்..என்ன யோசிக்கிறீங்க.. நாம பாத்தது கண்ணாயிரமா.. கண்ணாயிரம் ஆவியான்னுதானே நினைக்கிறீங்க.. காலையிலே அஞ்சலி செலுத்த போனவங்கள..உங்க மகா வீட்டுக்குள்ளே விடல.. ஜன்னல் பக்கம் இருந்த பாடியை காணல.. பாடியை எங்கேன்னு உங்க மகாகிட்ட கேட்டபோது டிரங்பெட்டியில இருக்கின்னு சொல்லியிருக்கு.. நீங்க…கண்ணாயிரம் உயிரோட இருக்கார் என்கிறீங்க.. பேப்பரில பொய்யா போடுவாங்களா..என்றார்.
அருவா அமாவாசை ம்..என்றவாறு கண்ணாயிரம் ஆவியாக பறந்து வருவதுபோல் நினைத்துப் பார்த்தார். ஆ..பயங்கரமா இருக்கே.. நேரிலே பயங்கரமா இருப்பான்.. ஆவியா படுபயங்கரமா இருக்கானே.. என் கழுத்தை நெரிக்கவருகிற மாதிரி பாய்ந்து வருகிறானே.. ஏற்கனவே என் மேலே அவனுக்கு கோபம் வேற.. ஆனா அவன் காதை கடிச்சேனே.. ஏய் தம்பி.. நீ சொல்லுறதை நான் நம்பல.. கண்ணாயிரம் உயிரோட இருக்கான் என்றார்.
மோட்டார் சைக்கிள் வாலிரோ.. பேப்பரில தப்பா போடமாட்டாங்களே என்றார்.
என்னடா..பேப்பர்..பேப்பர் என்கிற..வா கடையிலே போயி பேப்பர் வாங்கிப் பார்ப்போம் என்று அருவா அமாவாசை சொல்ல சரி வாங்க என்று மோட்டார் சைக்கிள் வாலிபர் சொல்ல.. இருவரும் பெட்டிக்கடைக்கு விரைந்தார்கள்.
ஏங்க..காலையிலே வந்த பேப்பர் கொடுங்க என்று மோட்டார் சைக்கிள் வாலிபர் சொல்ல கடைக்காரர்.. என்னதம்பி.. இன்னைய பேப்பரா.. சீக்கிரமே வித்துப் போச்சுப்பா.. ஏதோ சுற்றுலா போன புதுவை முதியவர் சாவுன்னு செய்தி போட்டிருந்துச்சு..எல்லாம் வித்துப் போச்சு.. போஸ்டர் மட்டும்தான் தொங்குது என்றார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர்.. ஆ பாத்தீங்களா.. நான் சொன்னா நம்ப மாட்டேன்னு சொன்னீங்களே.. பேப்பர்தான் பாக்க முடியல.. போஸ்டராவது பாருங்க என்றார்.
அருவா அமாவாசை அந்த கறுப்பு போஸ்டரை உற்றுப் பார்த்தார். அவர் கண்ணாடி போடாததால் சரியாகத் தெரியவில்லை.. ஆனாலும் கண்ணை உருட்டி உருட்டி படத்தைப் பார்த்தார். கண்ணாயிரம் ஆவி உருவில் வந்து டிசியூம் என்று அவர் முகத்தில் குத்துவது போலிருக்க.. அம்மாடி என்று அருவாஅமாவாசை கத்தினார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.