May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் காதைக்கடித்த மாமனார் / நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Father-in-law who bit Kannayiram’s ear / comedy story / Tabasukumar

22.1.2024
கண்ணாயிரம் விபத்தில் இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்த மாலைகளுடன் தாரைத் தப்பட்டையுடன் திரண்டு வந்தனர்.
இதே நேரத்தில் கண்ணாயிரம் மறுமணம் செய்யப் போவதாக தவறாக தகவல் அறிந்து கண்ணாயிரம் மாமனார் அருவாஅமாவாசை அருவாளுடன் வந்து மிரட்ட கண்ணாயிரம் உள் அறைக்குள் ஓடி புகுந்து கதவைபு பூட்டிக் கொண்டார்.
கண்ணாயிரம் இரண்டாம் திருமணம் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடிக்க அருவாஅமாவாசை மயங்கிவிழ.. அவர் அருவாவை எடுத்து பூங்கொடி மறைத்துவைக்க மயக்கம் தெளிந்த அருவாஅமாவாசை தன் அருவாவை கண்ணாயிரம்தான் ஒளித்துவைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார். கண்ணாயிரத்திடம் சாதுர்யமாகப் பேசி அவரை கதவை திறந்துகொண்டு வரச்செய்து.. அவரை வளைத்துப்பிடித்த அருவா அமாவாசை..அருவாளை எங்கேடா என்று கண்ணாயிரத்திடம் கேட்க அவர் ஓ..என்று அழுதார்.
அவரது பிடியில் சிக்கிய கண்ணாயிரம்..அம்மா காப்பாத்துங்க.அப்பா காப்பாத்துங்க என்று கத்தினார்.பூங்கொடி..மாமனும் மருமகனும் கட்டிப்பிடித்து விளையாடுகிறார்கள் என்று சிரித்துக்கொண்டார்.அருவா அமாவாசை கோபத்தில் டேய்..நீ என்ன தப்பு பண்ணினாலும் விட்டிருவன்..என் அருவாவைத்தரலைன்னா உன்னைவிட மாட்டேன் டா என்று பிடியை இறுக்கினார். கண்ணாயிரம் எனக்குத் தெரியாது என்று சொல்ல..ஆத்திரத்தில் கண்ணாயிரம் காதை அருவாஅமாவாசை கடித்தார். உடனே கண்ணாயிரம்..காது..காது..அய்யோ அம்மா காப்பாத்துங்க என்று அலறினார்
பூங்கொடி அவரைப் பார்த்து ஏங்க விளையாடியது போதும்..வாங்க என்க கண்ணாயிரம்..ஏய்..நான் விளையாடல..உங்க அப்பாதான் விளையாடுறாரு.. என்காதைக்கடிக்கிறார்.. என்றார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க..காதில ஏதாவது ரகசியம் சொல்வாரு.. கேட்டுக்குங்க என்க கண்ணாயிரமோ.. ஏய் நான் சொல்லறதையே நீ காதில போட்டுக்க மாட்டிக்கிய என்று சிணுங்கினார்.
உடனே அருவா அமாவாசை.. ஏம்மா.. நீ உள்ளே போ.. நீ முழுகாம இருக்க என்று சொல்ல பூங்கொடி அங்கிருந்து உள் அறைக்குள் சென்றார்.
அப்போது அருவாஅமாவாசை தன் கையை மடக்கி கண்ணாயிரம் முதுகில் ஓங்கி குத்தினார்.. சொல்லு.. அருவாளை எங்கேடா.. சொல்லு.. என்று கேட்டவாறு மீண்டும் குத்தினார்.

இதனால் பதறிப்போன கண்ணாயிரம் பூங்கொடி..என் பொண்டாட்டி பூங்கொடி வந்து காப்பாத்து..உயிர் போகுது என்று கத்தியவுடன்.. பூங்கொடி மின்னல் வேகத்தில் அங்கு பாய்ந்து வந்தார்.
ஏதோ ஆபத்து என்று புரிந்து கொண்டவர் அருவாஅமாவாசை பிடியிலிருந்த கண்ணாயிரத்தைப் பரிதாபமாகப் பார்த்தார்.
கண்ணாயிரம்.பூங்கொடி..என்னப் பாக்கிற. .உங்க அப்பா உண்மையிலே அடிக்கிறாரு.. காப்பாத்து.. என்று அலறினார்.
பூங்கொடி விபரீதத்தை உணர்ந்து அப்பா அவரை விடுங்க..அவர்தான் இரண்டாம் கல்யாணம் என்னைத்தானே பண்ணுவேன்னு சொல்லிட்டாரே. பிறகு ஏன் அவரை கிடுக்கிப்பிடி போட்டு பிடிச்சிருக்கீங்க.. விடுங்க என்றார்.
அருவா அமாவாசையோ..உனக்குத் தெரியாதும்மா..நீ முழுகாம இருக்கிறதாலே மெதுவா அடிக்கிறேன்.. இல்லை அடி பின்னிடுவேன்..நீ உள்ளே போ என்று எச்சரித்தார்.
பூங்கொடியோ அவர் என்ன தப்பு செஞ்சார் சொல்லுங்கப்பா என்க அருவாஅமாவாசையோ..கேளும்மா..இந்த படுக்காளிப்பய..நான் மயங்கிவிழுந்தப்போ வெளியே ஓடிவந்து அருவாளை எடுத்து ஒளிச்சிவச்சிட்டாம்மா..கேட்டா தெரியாதுன்னு சொல்லுறாம்மா..இவனை என்ன செய்யுறது..நீ முழுகாம இருக்கா உள்ளே போம்மா என்றார்.
பூங்கொடி சிரித்தபடி..அப்பா..அருவாவா..இதுக்குத்தான் இந்த அக்கப்போரா..நீங்க அந்த கண்ணாயிரத்துக்கு ஸ்பெஷல் அருவான்னுதானே சொன்னீங்க.. அதான் நான் தான் எடுத்து உள்ளேவச்சிருக்கேன்..என்றார்.
அருவா அமாவாசை ஏம்மா..அந்த அருவா உனக்கு வேணுமா என்க.. பூங்கொடி ஆமாப்பா என்றார்.
உடனே அருவாஅமாசை..ஏம்மா நீ முழுகாம இருக்க..நீ ஆசைப்பட்டதை நான் வாங்கிக்கொடுக்கணும்.. எது வேணுமானாலும் வாங்கித்தருகிறேன்.. இந்த அருவாவைக் கொடும்மா..அது என்கையில் இருந்தாதான் எனக்கு வீரம் வரும்மா என்றார்.
பூங்கொடியோ..அப்பா..தேங்காய் உடைக்க இந்த அருவாதான் நல்லாயிருக்கும்..நீங்க வேற அருவா வாங்கிங்கிங்க என்றார்.
அருவா அமாவாசை அப்படியாம்மா..அந்த அருவாவைக் கொடு..நான் அந்த அருவாளைக்காட்டி அதேமாதிரி வேற அருவா வாங்கிக் கிறேன் என்று சொல்ல பூங்கொடியும் அதை நம்பி அருவாளை எடுத்துக்கொடுத்தார்.
அருவா அமாவாசை அந்த அருவாளை கையில் வாங்கியதும்..வீரம் வந்தவர் போல்..டேய் எவண்டா என் மருமகன் உயிரோடு இருக்கும்போது..நினைவஞ்சலி போஸ்டர் ஓட்டியவன். .டேய் வாங்கடா என்று வீட்டைவிட்டு ரோட்டுக்கு வந்தார்.
அருவாளை சுழற்றி சுழற்றி ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா என்று அழைத்தார். அதைப் பார்த்ததும் மாலைபோடவந்தவர்கள் தாரைதப்பட்டை அடிக்கவந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
அருவாஅமாவாசை.. ஏய் பயந்தான் கொள்ளிகளா..என் மருமகன் கல்லுமாதிரி இருக்கான்.. அவன் செத்துப் போயிட்டான்னு எவண்டா போஸ்டர் ஒட்டினது என்று கத்தினார்.
அப்போது மோட்டார் சைக்கிள் வாலிபர் மோட்டார் சைக்காளில் வேகமாக அங்கு வந்தார்.. அருவா அமாவாசையைபு பார்த்து..ஏங்க நான் தான் போஸ்டர் அடிச்சேன். செலவு அதிகமாயிட்டு.. கொஞ்சம் பணம் கொடுங்க என்று விவரம் அறியாமல் கேட்க.. வாய்யா வா..உன்னைத்தான் தேடுகிறேன்.. கண்ணாயிரம் பெயர் பிரச்சினை வந்த போது நீதான் கண்ணாயிரம் படம் போட்ட கல்யாண கார்டை காட்டி கலாட்டா பண்ணுன.. இப்போ..போஸ்டர் அடிச்சி கலாட்டா பண்ணுனியா.. உன்னை விடமாட்டேன்..யாருடா சொன்னா.. உனக்கு கண்ணாயிரம் செத்துட்டான்னு.. சொல்லு என்க..மோட்டார் சைக்கிள் வாலிபர்.. ஏங்க..குற்றாலத்துக்கு சுற்றுலா போனபோது பஸ்கவிழ்ந்து கண்ணாயிரம் போயிட்டாருன்னு ஜவுளிக்கடைக்கார்தான் போனில் சொன்னார்.. அதான் நடுத்தெரு நண்பர்கள் குழு சார்பில். போஸ்டர் ஒட்டினேன். தாரைதப்பட்டை ஏற்பாடு பண்ணினேன். பாடி எடுக்கும்போது சொல்லுங்க வர்ரேன்னு சொல்லிட்டு கடைக்குப் போயிட்டேன் என்றார்.
அருவாஅமாவாசை கோபத்தில் அந்த ஜவுளிக்கடைக்காரன் எங்கே இருகான்..அவன் போன் நம்பரைக்கொடு என்று கத்த.. மோட்டார்சைக்கிள் வாலிபர்.. அந்த போன் நம்பரை சொன்னார்.. ஏய் உன் செல்போனில் போட்டு கொடு.. நான் பேசுறன் என்க மோட்டார் சைக்கிள் வாலிபர் தன் செல்போனில்..ஜவுளிக்கடைக்காரர் நம்பருக்கு போன் போட்டார்.
ஜவுளிக்கடைக்காரர் பேசியதும்..மோட்டார் சைக்கிள் வாலிபர் அருவாஅமாவாசை யிடம் போனை கொடுத்தார். மோட்டார்சைக்கிள் வாலிபர் பேசுவதாக நினைத்து ஜவுளிக்கடைக்காரர்..ஏய்..எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா. .நான் வருவதற்குள் பாடியை எடுக்கக் கூடாதுடா.. கண்ணாயிரம் ஜவுளி வாங்கின பாக்கி நாப்பதாயிரம் இருக்குடா..அதைக் கொடுத்தாத்தான் பாடியை எடுக்கவிடணும்..புரிஞ்சுதா..நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. நீ என்னடா வாயில கொழுக்கட்டையை விழுங்குனவன் மாதிரி பேசாம இருக்க.. முட்டாப்பயல..முட்டாப்பயல என்று திட்ட அருவாஆமாவாசை கோபத்தில்..டேய்.. நீ முட்டாப்பய..உன் அப்பா முட்டாப்பய..உன் தாத்தா முட்டாப்பய என்று ஏச ஜவுளிக்கடைக்காரர் திணறி.. ஏதோ ராங் நம்பர் என்று சொல்லி கட்பண்ணினார்.
டேய் மீண்டும் போடுடா என்று அருவாஅமாவாசை மிரட்ட. .மோட்டார்சைக்கிள் வாலிபர் போன் பண்ணினார். ரிங் போனது..அவர் எடுக்கவில்லை.மீண்டும் ராங்நம்பர் வந்து முட்டாப்பய என்று ஏசப் போறான்னு..நினைத்து ஜவுளிக்கடைக்காரர் போனை எடுக்க யோசித்தார்.அதைப்பார்த்த அருவாஅமாவாசை..என்னடா ஆச்சு என்க..போனை அவர் எடுக்கல..நீங்க ஏசுனதைப் பார்த்து பயந்துட்டாரு என்றான்.அப்படியா உன் நம்பரில எடுக்கலன்னா..என்ன..என் போனில் போடுகிறேன் என்று அருவா அமாவாசை ஜவுளிக்கடைக்காரர் செல்நம்பரை அழுத்தினார்..ஆ..ரிங் போகுது..ரிங் போகுது..நான் பேசுறன் என்ற அருவா அமாவாசை நைசாகப் பேசினார்.
ஹலோ..ஜவுளிக்கடைக்காரருங்களா..நான் உங்க வாடிக்கையாளர்..உங்க ஜவுளிக்கடையில் துணி எடுக்கவந்தேன்..கடை பூட்டிக் கிடந்துச்சு..அதான்..பேசுறன் என்றார். அதற்கு ஜவுளிக்கடைக்காரர்..வாடிக்கையாளரா..நல்லதுங்க.. என்கிட்டஜவுளி வாங்கின கண்ணாயிரம் கடன் கொடுக்காம குற்றாலத்துக்கு பொண்டாட்டியோடு ஓடிட்டான்.. அங்கே பஸ்விபத்தில் சிக்கிட்டான். ஆஸ்பத்திரில அட்மிட்டான அவனைப் பாக்கப்போனேன்.வார்டுல போய் கண்ணாயிரம் எங்கேன்னு கேட்டா அழுதுக்கிட்டே போயிட்டாருய்யா என்று சொன்னாரு..அங்கே வந்த பயில்வான்கிட்டேயும் கேட்டேன்..அவரும் கண்ணை கசக்கிக்கிட்டு கண்ணாயிரம் போயிட்டாருன்னு சொன்னாரு.அங்கே ஒரே புகைமூட்டமா இருந்துச்சு..நானும் கண்ணை கசக்கிட்டு காரில வர்ரேன்..பாடி எடுக்குமுன்னாலே வந்திடுவேன்..பணம் முக்கியமுல்லா..பாடியை எடுத்துட்டா கடனை யாருக்கிட்டே கேட்கிறது என்று சொல்லிக்கொண்டு போக..அருவாஅமாவாசை டென்சனாகி முட்டாப்பயல..முட்டாப்பயல..என்று ஏச..ஜவுளிக்கடைக்காரர் அட..இது எங்கோ கேட்ட குரல்மாதிரி இருக்கே..யார் நீங்க என்க..உன் தாத்தாடா என்று அருவாஅமாவாசை சொல்ல..எனக்கு தாத்தா இல்லையே..அவர் செத்துப் போயிட்டாரு என்று சொன்னார்.உடனே அருவா அமாவாசை..ஏய் நான் கண்ணாயிரம் மாமன் பேசுறண்டா..என்க ஜவுளிக்கடைக்காரரோ..மகிழ்ச்சியில்..சார்..சார்..கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி வந்திருக்கீங்க..கண்ணாயிரம் போயிட்டது வருத்தமாத்தான் இருக்கு..யார் உயிரையும் யாரும் பிடிச்சிவைக்க முடியாது.கண்ணாயிரம் கொடுக்க வேண்டிய நாப்பதாயிரம் பாக்கியை எனக்கு கொடுத்திடுங்க சார் என்று நாதழு தழுக்க கூறினார்.உடனே அருவா அமாவாசை..ஏய் அவன் கொடுக்கவேண்டியப் பாக்கியை நான் எப்படி கொடுக்க முடியும்..என்று கேட்க..ஜவுளிக்கடைக்காரர்..சார் கண்ணாயிரம் இல்லைன்னா..அவருடைய மாமன்தானே கடனை கொடுக்கணும்..என்க.அருவா அமாவாசை ஆத்திரத்தில் ஏய் நான் ஏண்டா கொடுக்கணும்..அவன் எங்கேயும் போகல..வீட்டிலதான் இருக்கான்..அவன்கிட்ட வந்து வாங்கிங்க என்றார்.
பாடிக்கிட்டே வாங்க முடியுமா என்று ஜவுளிக்கடைக்காரர் கேட்க நீ பாடிக்கிட்டே வாங்கினாலும்சரி..பாடாம வாங்கினாலும்சரி..என்னை ஆளைவிட்டாப் போதும் என்கஜவுளிக்கடைக்காரர்.. நீங்க அப்படி சொல்லக்கூடாது.. நீங்கதான் அந்த கடனைத் தரணும்..என்க.. அருவா அமாவாசை..ஏய்..கண்ணாயிரம் என்ன செத்தாப் போயிட்டான். .உயிரோடத்தானே இருக்கான். அவங்கிட்டேயே கேளுங்க என்றார்.
என்ன கண்ணாயிரம் உயிரோடு இருக்காரா…என்று ஜவுளிக்கடைக்காரர். கேட்க..ஆமாடா..ஆமா…அவன் செத்துப்போயிட்டான்னு சொன்னதுக்கு நீதான் அவனுக்கு நாப்பதாயிரம் கொடுக்கணும் என்க.. ஜவுளிக்கடைக்காரர் பதில் சொல்லாமல் போனை கட்பண்ணினார்.
ஜவுளிக்கடைக்காரர் சொரி பூச்சி கடித்ததால் ஏற்பட்ட காயத்தை சொரிந்த படி..ஆ..என்று கத்தினார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.