June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்தளம்பாறை ஊராட்சியில் புதிய நியாய விலை கடை

1 min read

A new fair price shop in Mattalampara Panchayat

2/2/2024
தென்காசி ஊராட்சி ஒன்றியம் மத்தளம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத் திறப்புவிழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த பகுதியில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டித்தரக்கோரி மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றும் விதமாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நியாய விலைக் கடையின் கட்டிடப்பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய நியாய விலைக் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மத்தளம்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் மைதிலி தலைமை தாங்கினார்.

மத்தளம்பாறை ஊராட்சி துணைத் தலைவர் அ.வேலம்மாள் முன்னிலை வகித்தார்.மத்தளம்பாறை ஊராட்சி செயலாளர் ந.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு. ஷேக் அப்துல்லா, தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகு சுந்தரம், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி சோதிடர், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், தென்காசி காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் ரபீக், சுப்பிரமணியன், மத்தளம்பாறை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வே. சஞ்சீவ் குமார், சுசீந்திரன், இசக்கி பாண்டியன், மற்றும் திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மத்தளம்பாறை திமுக கிளைச் செயலாளர் சுடலை அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *