May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்

1 min read

What Happened in the Assembly?: Governor’s House Explanation

12.2.2024
தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,12) கவர்னர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் தனது உரையை முடித்தார். இதற்கான காரணம் மற்றும் நடந்த நிகழ்வுகள் குறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழக சட்டசபை இன்று (பிப்.,12) கவர்னர் உரையுடன் துவங்கியது. அப்போது உரையின் துவக்கம் மற்றும் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முன்பே கூறியும் அதனை அரசு புறக்கணித்ததாகவும், உரையில் உண்மைக்கு மாறான அம்சங்கள் இடம்பெற்றதாகவும் கூறி 2 நிமிடத்தில் தனது உரையை முடித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்.,9ம் தேதி கவர்னரின் உரை ஆவணம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறாக தவறான அம்சங்கள் அடங்கிய பல பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், கவர்னர் உரையின் துவக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக முதல்வருக்கும், சபாநாயகருக்கும் கவர்னர் கடிதம் எழுதியிருந்தார்.

கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். கவர்னரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

உண்மைக்கு மாறான தகவல்கள்

இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறள் அடங்கிய முதல் பத்தியையும் படித்தார். அதன்பிறகு, அதில் இடம்பெற்ற தவறான கூற்றுகள், உண்மைக்கு மாறான பத்திகள் இடம்பெற்றிருந்ததால்

அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு தனது உரையை படிக்க இயலாது என்பதை கவர்னர் வெளிப்படுத்தினார்.

அதன்பின் சபாநாயகர், உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்த உரை முடியும் வரை கவர்னர் அமர்ந்திருந்தார்; சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டிருந்த அட்டவணையை பின்பற்றாமல், கவர்னருக்கு எதிராக அவதூறை பேச துவங்கினார். நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றை பின்பற்றுபவர் என்றும் பேசினார்.

சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். கவர்னருக்கு எதிராக வசை பாடிய போது, கவர்னர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வெளியீடு

சட்டசபையில் இன்று கவர்னர் ரவி ஆற்றிய உரை அடங்கிய வீடியோ கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 3:17 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிட்டுள்ளனர்.

==

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடித்து சிதறியது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட, உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானார்.
ப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பை நடத்துவதற்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்கும், சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில் பயிற்சி அளிக்கப்பட்டதும், சதி திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்தது.

அதனால், சென்னை, நெல்லை, கோவை, மதுரை உட்பட, 21 இடங்களில், நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பயிற்சி

இந்த சோதனை குறித்து, என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதும், 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆறு மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் என, ஏராளமான, ‘டிஜிட்டல்’ ஆவணங்கள் சிக்கின. இவை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ரகசியமாக ஆட்கள் சேர்க்க பயன்படுத்தப்பட்டவை.

சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ரகசியமாக ஆட்களை சேர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அரபிக் பாடம் நடத்துவது போல, பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது மற்றும் அதை வெடிக்க வைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள, 14 பேரில், 10 பேர் கோவை அரபிக் கல்லுாரியில், பயங்கரவாத செயலுக்கான பயிற்சி எடுத்தது உறுதியாகி உள்ளது.

கடந்த, 2019ல், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில், 250 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூரத்தை நிகழ்த்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமை தங்களின் குருவாக ஏற்று, கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். அரபிக் கல்லுாரிகளில் சஹ்ரான் ஹாசிம் பேச்சும் ஒலிபரப்பப்பட்டு உள்ளது.

அத்துடன், தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, பயங்கரவாத செயலில் ஈடுபடவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

சதி திட்டம்

என்.ஐ.ஏ., சோதனையின் போது, சென்னை அரபிக் கல்லுாரியில் பயிற்சி பெற்ற மற்றும் வகுப்பு எடுத்த, ஜமீல் பாஷா உமாரி, இர்ஷாத், மவுலவி ஹூசைன் பைசி, அப்துல் ரஹ்மான் உமரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

இவர்களில், அப்துல் ரஹ்மான் உமரியிடம், கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.