பாவூர்சத்திரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நற்பணி மன்றம் துவக்கவிழா
1 min read
A.P.J. in Pavurchatra. Abdul Kalam Charity Forum Inauguration Ceremony (14.2.2024)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் தெற்கு ஆ.பி.ஜெ அப்துல் கலாம் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றம் துவக்கப்பட்டது
இந்த தெருவின் வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வர அனைவரும் ஒன்று கூடி தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயலாளர் போன்ற பதவிகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாத சந்தாவாக மாதம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது தொடக்க விழாவில் தெருவின் வளர்ச்சிக்காக அவரவர் விருப்பப்படி நிதி வழங்கினர்
இந்தக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன தலைமை தாங்கினார்.
முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அருள் லிங்கம் , ரோஸ் வணிக வளாக நிறுவனர் அகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெல்லை கார்ஸ் ,ஸ்பேர்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனர் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்தக் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஆ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக வேணி கிருஷ்ணகுமாரி,
துணைத் தலைவராக தங்கராணி பொதுச் செயலாளராக நாகராஜன்,
பொருளாளராக முகமது யாசின், செயலாளர்களாக
ரவி, ஜான் அலெக்ஸ் பாண்டியன்,செந்தில் ஆகியோரும், கௌரவ ஆலோசகராக நெல்லை கார்ஸ் , ஸ்பேர்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனர்,
கௌரவத் தலைவர்களாக
டி கே பாண்டியன், அருள் லிங்கம், ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காளி ராஜன், சுஜிதா உயர்தர உணவக நிறுவனர்
வெள்ளத்துரை, ராமச்சந்திரன், சந்திர கலா காஞ்சனா,டி கே கவிதா, மங்கையர்கரசி, சிவராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்
ஆ.பி.ஜெ அப்துல் கலாம் தெருவிற்கு சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தந்த கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
ஆ.பி.ஜெ அப்துல் கலாம் தெருவிற்கு கிழக்கே உள்ள எஸ் டி கே மாடர்ன் ரைஸ்மில்லில் இருந்து வரும் சாம்பல் கழிவுகளால் சிறு குழந்தை முதல் முதியவர் வரை உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் அதை சரி செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக தெருவின் நுழைவு வாயிலின் முகப்பில் பெயர் பலகை வைக்க மன்றம் அங்கீகரித்தது.
பிரதி மாதம் முதல் வெள்ளி அன்று இரவு 7 மணிஅளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .
முடிவில் பிரவீன் குமார் அனைவருக்கும் கூறினார்.