June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை புத்தக திருவிழா வில் நூல் வெளியீட்டு விழா

1 min read

Nellai Book Festival Book Release Ceremony

14.2.2024
திருநெல்வேலி நடைபெற்று வரும் பொருநை புத்தகத் திருவிழாவில் மதிமுக வழக்குரைஞர் ம.சு.சுதர்சன் தலைமையில் திருநெல் வேலி மாவட்ட வருவாய் அலுவலர் நூல் எழுதிய வெளியிட்டு விழா நடைபெற்றது.
நெல்லையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவின் ஒன்பதாவது நாளில் திருநெல்வேலியில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் ராஜ். துரைமுத்து எழுதிய’ஹீரோ பேனா’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் நெல்லை ம.சு.சுதர்சன் தலைமை தாங்கினார். நூலினை பதிப்பித்த கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகர் பாலசுப்பிரமணியன் நூலின் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். துணை வட்டாட்சியர் ரவிசங்கர் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் ராஜதுரை முத்து ஏற்புரையாற்றினார். வழக்கறிஞர் மதார் முகைதீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நன்றிகூறினார்.

இந்த நிகழ்வில் பேரி டர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம். முனைவர் கோ.கணபதி சுப்ரமணியன், கவிஞர்கள் கே பாமணி, ஜெயபாலன், 67 புலவர் ராமசாமி, பாப் பாக்குடி முருகன், நூலகர் அகிலன் முத்துக்குமார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *