June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அமைச்சரிடம் கோரிக்கை

1 min read

Request to minister to operate additional buses in Tenkasi district

15.2.2024
தென்காசி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட பகுதி மக்களின்நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கிட வேண்டும். அதன்படி சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, எல்லைப்புளி வழியாக கடையத்திற்கும், வீராணத்தில் இருந்து சோலைச்சேரி, ஊத்துமலை, மருதப்பபுரம், சண்முகநல்லூர் வழியாக சங்கரன்கோவிலுக்கும், தென்காசியில் இருந்து ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சின்னதம்பிநாடாரூர், கடையாலுருட்டி, சேர்ந்தமங்கலம் வழியாக வீரசிகாமணிக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *