June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு

1 min read

DMK Allotment of one Rajya Sabha seat to Kamal party in alliance

9.2.2024
தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு; மக்களவை தேர்தலில் போட்டியில்லை
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி. தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை பதவிக்கான தேர்தலில் ம.நீ.ம. கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *